Published:Updated:

எக்ஸ்ரே எடுக்க சென்ற பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவமனை நிர்வாகி கைது!

எக்ஸ்ரே எடுக்க சென்ற பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவமனை நிர்வாகி கைது!
எக்ஸ்ரே எடுக்க சென்ற பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவமனை நிர்வாகி கைது!
எக்ஸ்ரே எடுக்க சென்ற பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவமனை நிர்வாகி கைது!

சென்னை: எக்ஸ்ரே எடுக்க சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவமனை நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 27 வயதான திருமணமான இளம்பெண் ஒருவர்,  கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், ''எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

எனது இடது கை தோள் பட்டையில் வலி ஏற்பட்டதால், கடந்த மாதம் 20 ஆம் தேதி எனது கணவருடன் கும்மிடிப்பூண்டி பஜார் அருகே, முனுசாமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன். அங்கிருந்த டாக்டரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்ரே எடுக்க, அதே மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குச் சென்றேன்.

அந்த தனியார் மருத்துவமனையின் நிர்வாகி சங்கர் (33) எனக்கு எக்ஸ்ரே எடுப்பதாக கூறி,  கதவை மூடிவிட்டு என் ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு அவர் கொடுத்த கோட்டை போட சென்னார். நானும் அந்த கோட்டை போட்டுக்கொண்டேன். அதன் பிறகு என் கழுத்தில் இருந்த தாலியை கழற்றச்சொன்னார். நான் தாலியை கழற்ற மறுத்துவிட்டேன். ஆனால், தாலி இருந்தால் எக்ஸ்ரே சரியாக வராது என்று சொல்லி, அவரே என் தாலியை கழற்றிவிட்டார்.

அதன்பின்,  என்னை படுக்கச்சொல்லி நான் போட்டிருந்த கோட்டின் 2 பட்டன்களை அவரே கழற்றி விட்டார். பிறகு, எனது தோள் பட்டையை தவிர்த்து எனது உடலில் உள்ள பாகங்களை தொட்டு அழுத்தி கூச்சமாக இருக்கிறதா? என கேட்டு ஆபாசமாக பேசினார். அத்தோடு, என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். நான் மறுத்தபோது, நீ உடை மாற்றியதை கேமிராவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இங்கு நடந்ததை உனது கணவரிடமோ அல்லது வேறு யாரிடமோ சொன்னால் அந்த வீடியோவை இன்டர்நெட்டில் போட்டு அசிங்கப்படுத்திவிடுவேன். மீறி நீ என்னை அசிங்கப்படுத்த நினைத்தால், உன்னையும் உன் கணவரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். அதனால் நான் பயந்து போய் எனது கணவரிடம் இதை சொன்னால் விபரீதம் நடக்கும் என்று நினைத்து சொல்லாமல் மறைத்துவிட்டேன்.

மேலும், இதையே நினைத்து தனிமையில் அழுது கொண்டிருந்தேன். தற்கொலை செய்து கொள்வதுதான் ஒரே முடிவு என்ற நிலைக்கும் வந்து விட்டேன். இந்நிலையில், நான் அழுது கொண்டிருந்ததை என் கணவர் கவனித்துவிட்டார். அவர் கேட்டபோது, மருத்துவமனையில் நடந்ததை சொன்னேன். அதனால், என்னை மிரட்டும் நபர் மீது தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" என்று கூறி இருக்கிறார்.

புகாரை பெற்றுக் கொண்ட கும்மிடிப்பூண்டி போலீசார், வழக்கு பதிவு செய்து தனியார் மருத்துவமனை நிர்வாகி சங்கரை கைது செய்துள்ளனர்.