Published:Updated:

காவல் நிலையத்தில் பெண் கைதிக்கு டார்ச்சர்: எஸ்.ஐ. உள்பட 3 காவலர்கள் கைது!

Vikatan Correspondent
காவல் நிலையத்தில் பெண் கைதிக்கு டார்ச்சர்: எஸ்.ஐ. உள்பட 3 காவலர்கள் கைது!
காவல் நிலையத்தில் பெண் கைதிக்கு டார்ச்சர்: எஸ்.ஐ. உள்பட 3 காவலர்கள் கைது!

கோவை: உடுமலையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெண், காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 காவலர்களை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

உடுமலை, பழனி மெயின் ரோட்டில் உள்ள நாராயணன் காலனியைச் சேர்ந்த லீலாவதி (65) என்பவர், கடந்தாண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கிரைண்டர் கல்லால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த உடுமலை காவல்துறையினர், லீலாவதியின் வீட்டில் வாடகைக்கு இருந்த சந்திரா (49) என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காவல் நிலையத்தில் பெண் கைதிக்கு டார்ச்சர்: எஸ்.ஐ. உள்பட 3 காவலர்கள் கைது!

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திராவை சந்தித்த மதுரையைச் சேர்ந்த அவரது மகள் ராஜகுமாரியிடம், விசாரணையின் போது தன்னை நிர்வாணப்படுத்தியும், தலைகீழாய் தொங்க விட்டும் உடுமலை காவல்துறையினர் கடுமையாக சித்ரவதை செய்ததாக சந்திரா கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் ராஜகுமாரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சந்திராவை சித்ரவதை செய்ததாக கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த ஓராண்டாக விசாரணை நடத்திய எஸ்.பி. ரூபா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று உடுமலை காவலர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்கடர் விஜயகுமார், காவலர்கள் திலக்குமார், ரங்கநாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

காவல்நிலையத்தில் பெண் கைதியை சித்ரவதை செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ச.ஜெ.ரவி