Published:Updated:

சாத்தூரில் இளைஞர் கொலையில் 9 பேர் சிக்கினர்

சாத்தூரில் இளைஞர் கொலையில் 9 பேர் சிக்கினர்
சாத்தூரில் இளைஞர் கொலையில் 9 பேர் சிக்கினர்

சாத்தூரில் இளைஞர் கொலையில் 9 பேர் சிக்கினர்

சாத்தூரில் இளைஞர் கொலையில் 9 பேர் சிக்கினர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வள்ளுவன் நகரை சேர்ந்தவர் காந்தாரி. ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர் சொந்தமாக இரண்டு ஆம்புலன்ஸ் வைத்திருக்கிறார். இவருக்கு கனகராஜ், கருப்பசாமி, மந்திரமூர்த்தி என மூன்று மகன்கள்.  இரண்டாவது மகனான கருப்பசாமிதான் கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம், ‘’செண்பகாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுரபிக். இவருக்கு மும்பை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் சி.டி கடை இருக்கிறது. இவருக்கு மூன்று மகன்கள். இவரது இரண்டாவது மகன் அப்துல்லா(22).

திருச்செந்தூரிலுள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவரான அப்துல்லா, கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் வள்ளுவன்நகர் பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது அங்கு நின்ற பெண் ஒருவர் மீது இவரது பைக் மோதி விபத்துக்குள்ளானது. அங்கு நின்ற காந்தாரிமகன் மந்திரமூர்த்தி தட்டிக்கேட்டாராம். இதில் அப்துல்லாவுக்கும் மந்திரமூர்த்திக்கும் இடையே முன்பகை ஏற்பட்டது. 

மந்திரமூர்த்தியை கொலை செய்துவிடும் நோக்கில் அப்துல்லா செயல்பட்டு வருவதாக தகவல் கிடைக்க, மந்திரமூர்த்தியும் அவரது அண்ணன் கனகராஜும்  சேர்ந்து அப்துல்லாவை கொலை செய்துவிட்டனர். கனகராஜ், மந்திரமூர்த்தி ஆகிய இருவரும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.  கருப்பசாமி கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்து வந்தார்.

சாத்தூரில் இளைஞர் கொலையில் 9 பேர் சிக்கினர்

இந்தநிலையில் ஆயுதபூஜை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த கருப்பசாமி, நேற்று காலை  கோவைக்கு கிளம்பினார்.  நாகர்கோவிலிலிருந்து கோவை செல்லும் பேருந்தில் கோவில்பட்டியில் வைத்து ஏறினார். அவரை பின் தொடர்ந்த மர்ம மனிதர்கள்,  அடுத்துள்ள பஸ்டெப்போ நிறுத்தத்தில் ஏறியிருக்கிறார்கள்.  

கருப்பசாமி அமர்ந்திருந்த சீட்டிற்கு பின் சீட்டில் உட்கார்ந்த அந்த மர்மநபர்கள், கருப்பசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர். பரபரப்பான சூழ்நிலையில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்த ஒருவர், கருப்பசாமி மீது சுட்டார். நிலைதடுமாறிய கருப்பசாமி சம்பவ இடத்திலையே இறந்தார்.  துப்பாக்கி முனையில் பயணிகள் மிரட்டப்படுவதை அறிந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.  கொலையாளிகள் தப்பினர்.

சாத்தூரில் இளைஞர் கொலையில் 9 பேர் சிக்கினர்

தகவல் அறிந்து அங்கு வந்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி-யான ராஜராஜன், சோதனை நடத்தினார்.  தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையிர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கோவில்பட்டியைச் சேர்ந்த 9 பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்துல்லாவின் தந்தை ரஃபீக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்தநிலையில், ரஃபீக் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.  

- எஸ்.சரவணப்பெருமாள், எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ் ,  நந்தகுமார்
 

அடுத்த கட்டுரைக்கு