Election bannerElection banner
Published:Updated:

கோவை: கொலை செய்து பாலியல் வன்கொடுமை - 71 வயது மூதாட்டிக்கு நடந்த கொடுமை!

கொலை
கொலை

கோவை, பன்னீர்மடைப் பகுதியில் 71 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கோவை, துடியலூர் பன்னீர்மடைப் பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து வெவ்வேறு பகுதிகளிலுள்ள நிலையில், மூதாட்டி மட்டும் தனியாக வசித்துவந்திருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கொலை செய்திருக்கிறார்.

கோவை
கோவை

மேலும், மூதாட்டியின் நகைகளையும் செல்போனையும் திருடிச் சென்றிருக்கிறார். நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியைக் கொலை செய்ததாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது.

வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மனைவிக்கு பாலியல் டார்ச்சர் - அ.ம.மு.க நிர்வாகி கொடூரக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், சேவகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் வினோத் என்ற கருப்பையாதான் இந்தச் செயலில் ஈடுபட்டதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. கட்டட வேலை செய்துவந்த வினோத் பன்னீர்மடையில் தனது மனைவி, மகளுடன் வசித்துவந்திருக்கிறார்.

வினோத்
வினோத்

மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த வினோத், அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து தலைமறைவாகியிருந்த வினோத்தைப் பிடிக்க, தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டிருந்தது. தேடுதலுக்கு பிறகு, அவர்கள் வினோத்தை நேற்று கைதுசெய்தனர்.

இந்தநிலையில், மூதாட்டிக்கு நடந்த பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்களை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து போலீஸார் கேட்டபோது, ``மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்தேன்” என வினோத் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

பாலியல்
பாலியல்

கைதுசெய்யப்பட்ட வினோத், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு