Published:Updated:

இத்தாலியரை கொன்றுவிடுவோம்: ஒடிசா மாவோயிஸ்டுகள் திடீர் மிரட்டல்!

Vikatan Correspondent
இத்தாலியரை கொன்றுவிடுவோம்: ஒடிசா மாவோயிஸ்டுகள் திடீர் மிரட்டல்!
இத்தாலியரை கொன்றுவிடுவோம்: ஒடிசா மாவோயிஸ்டுகள் திடீர் மிரட்டல்!

புவனேஸ்வர்: பிணைக்கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டதைத் தொடர்ந்து.  புதிய நிபந்தனையை  விதித்துள்ள மாவோயிஸ்டுகள், அதனை நிறைவேற்ற தவறினால த்ங்களிடம் பிணைக்கைதியாக உள்ள இத்தாலியரை  கொன்றுவிடுவோம் என திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தங்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் அரசு சார்பில் கையெழுத்திட வேண்டும் என்றும்,  இந்த நிபந்தனையை 96 மணி  நேரத்திற்குள் நிறைவேற்ற தவறினால் இத்தாலியரை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ள மாவோயிஸ்டுகள், இதனால் அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே இன்று காலை வரை நிலைமை சுமூகமாகவே சென்றது. பிணைக்கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஒடிசா  அரசுக்கு விதித்த கெடுவை மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை வரை மேலும் ஒரு நாள் நீட்டிப்பதாக அறிவித்திருந்தனர்.

தங்களிடம் பிணைக் கைதிகளாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மற்றும் இத்தாலி சுற்றுலா பயணி பாவ்லோ  போகஸ்கோ இருவரையும் மாவோயிஸ்டுகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இருவரையும் விடுவிக்க  மாவோயிஸ்டுகள் 13 நிபந்தனைகளை அறிவித்தனர். அதோடு இன்று மாலை வரை காலக் கெடுவும் விதித்தனர்.

இந்நிலையில், மாவோயிஸ்டுகளின் முக்கிய கோரிக்கையை ஏற்பதாக அறிவித்த ஒடிசா அரசு,  27 கைதிகளை சிறையிலிருந்து  விடுவிக்க ஒடிசா அரசு முடிவு செய்தது.

ஆனால் மத்திய அர்சு கைதிகளை சிறையிலிருந்து விடுப்பதை விரும்பவில்லை.அத்துடன் இது தொடர்பாக  மாவோயிஸ்டுகளூக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்தே மாவோயிஸ்டுகள் மேற்கண்ட நிபந்தனையை  விதித்ததாக தெரிகிறது.