Election bannerElection banner
Published:Updated:

முன்னாள் அமைச்சர் சிவக்குமார் படுகொலை! புதுச்சேரியில் பயங்கரம்

முன்னாள் அமைச்சர் சிவக்குமார் படுகொலை! புதுச்சேரியில் பயங்கரம்
முன்னாள் அமைச்சர் சிவக்குமார் படுகொலை! புதுச்சேரியில் பயங்கரம்

முன்னாள் அமைச்சர் சிவக்குமார் படுகொலை! புதுச்சேரியில் பயங்கரம்

முன்னாள் அமைச்சர் சிவக்குமார் படுகொலை! புதுச்சேரியில் பயங்கரம்

முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான வி.எம்.சி சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலைச் சேர்ந்த வி.எம்.சி சிவக்குமார் திமுகவின் மூத்த அரசியல்வாதி. 1980-ல் நிரவி தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்று விவசாயத்துறை அமைச்சரானார். 1996-ல் திமுக ஆட்சியில் சபாநாயகர், 2001, 2006-ல் திமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சட்டமன்றத் தேர்தல் நிரவி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் இவர் அளித்த ஆதரவில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதனால் அவருக்கு சாராய வடிகால் வாரியத்தின் சேர்மன் பதவியை அளித்தார் ரங்கசாமி.

முன்னாள் அமைச்சர் சிவக்குமார் படுகொலை! புதுச்சேரியில் பயங்கரம்

இந்நிலையில் 2016 பொதுத் தேர்தலுக்கு முன் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததால் அவருக்கு நிரவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு திமுக வெற்றி பெற்றது. 3 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சாராய வியாபாரி ராமு என்பவரின் கொலையில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. அது தொடர்பாக இவருக்கு கொலை மிரட்டல்களும் இருந்து வந்தது. அதனால் சமீப காலமாக வெளியில் வருவதையும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். மேலும் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை நிரவியில் தான் கட்டிவரும் திருமண மண்டபத்தின் கட்டுமானப் பணியினைப் பார்வையிட காரில் சென்றிருக்கிறார். அப்போது அவரது கார் மீது அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில் புகை மூட்டம் ஏற்பட்டதால் காரில் இருந்து இறங்கிய சிவக்குமார் திருமண மண்டபத்திற்குள் ஓடி தப்பிக்க முயன்றார். ஆனால் அவரை தொடர்ந்து விரட்டிச் சென்ற கும்பல் திருமண மண்டபத்துக்குள்ளே சென்று படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டது. சாராய வியாபாரி ராமு கொலைக்கு பழிவாங்கும் செயலாகத்தான் இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணையைத் துவக்கியுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ஜெ.முருகன்

படங்கள்: அ.குரூஸ்தனம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு