Published:Updated:

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி, காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.  மேலும், அவரின் நண்பர் சயான், மற்றொரு விபத்தில் காயமடைந்தார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.ஜெயலலிதா, சசிகலா அவரிகளின் அறைகளை உடைத்து மதிப்புமிக்க பொருளைத் அவர்கள்  திருடிச்சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில், காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலப்புரம் பகுதியில் ஜித்தீன், சம்சீர் அலி ஆகியோரை தமிழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் மரணமடைந்த சயானின் மனைவி மற்றும் மகள் கொலை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. திருச்சூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளன. இதனிடையே கோவை மருத்துவமனையில் சயானிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார் பாலக்காடு எஸ்.ஐ சசி.