Published:Updated:

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: கனகராஜ் மனைவியிடம் விசாரணை!

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: கனகராஜ் மனைவியிடம் விசாரணை!
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: கனகராஜ் மனைவியிடம் விசாரணை!

நீலகிரி மாவட்டத்தில், 900 ஏக்கரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில், மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களா, ஜெயலலிதா அவ்வப்போது ஓய்வெடுக்கும் இடமாக இருந்துவந்தது. 'ஜெயலலிதா இறந்த பிறகு, இந்த பங்களா இனி யாருக்குச் சேரப்போகிறது' என்று மக்களின் அங்கலாய்ப்பாக இருந்துவந்த நிலையில், திடீரென கடந்த 24-ம் தேதி கொடநாடு பங்களாவில் பணிபுரிந்துகொண்டிருந்த காவலாளி ஓம் பகதூர், மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரைத் தாக்கிவிட்டு, எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் புகுந்த தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: கனகராஜ் மனைவியிடம் விசாரணை!

இதையடுத்து, நீலகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையிலான போலீஸார், கொடநாடு பங்களாவுக்குச் சென்று விசாரணை நடத்தினர். பிறகு, இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் முக்கிய நபராக, தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டவர், கனகராஜ். இவர், போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர். கடந்த வாரம் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், தற்போது கனகராஜின் மனைவி கலைவாணியிடமும், கலைவாணியின் சகோதரர் தனபாலிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

-ரமேஷ்கந்தசாமி