Published:Updated:

`அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருகிறேன்...' 900 கோடி சுருட்டிய திருப்பதி கோயில் நிர்வாகி!

லட்சுமிநாராயணா ( social media )

2019-ம் ஆண்டில் சங்கரெட்டியில் உள்ள அமீன்பூரில் 23 ஏக்கரில் தலா 38 மாடிகள் கொண்ட 10 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். முன்கூட்டியே பணம் செலுத்துபவர்களுக்குச் சலுகைகள் என்று அறிவித்து, வாடிக்கையாளர்களிடம் அதிக பணத்தையும் வாங்கியுள்ளார்.

நிலம், பணம், நகை என ஏதோ ஒன்றில் முதலீடு செய்யும் மக்கள், ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் அவ்வப்போது நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர், லட்சுமிநாராயணா மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தருவதாகக் கூறி, சுமார் 900 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருகிறேன்...' 900 கோடி சுருட்டிய திருப்பதி கோயில் நிர்வாகி!

இவர் `சாஹிதி சரவணி எலைட்’ என்ற பெயரிலும், `சாஹிதி இன்ப்ராடெக் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தருவதாக அறிவித்துள்ளார். அதை நம்பி சுமார் 2,500 பேர் அவரிடம் பணம் செலுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து 900 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார்.

ஏமாற்றப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் லட்சுமிநாராயணாவை ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் டிசம்பர் 2-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று கைது செய்தனர்.

ஆரம்பகட்ட விசாரணையில், `சாஹிதி இன்ஃப்ராடெக்' மூலம் குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தது. அதோடு அடுத்தகட்ட விசாரணையில், `சாஹிதி சரவணி எலைட்' என்ற பெயரிலும் மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரிந்தது.

2019-ம் ஆண்டில் ஹைதராபாத் சங்கரெட்டியில் உள்ள அமீன்பூரில் 23 ஏக்கரில் தலா 38 மாடிகள் கொண்ட 10 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளார். அதோடு முன்கூட்டியே பணம் செலுத்துபவர்களுக்குச் சலுகைகள் என்று அறிவித்து, வாடிக்கையாளர்களிடம் அதிக பணத்தையும் வாங்கியுள்ளார். 

கைது
கைது

ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்திலிருந்து அனுமதி பெறத் தாமதம் ஏற்படுகிறது என்று அவ்வப்போது சாக்கு சொல்லி வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளார். 3 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏதும் நடக்காத நிலையில், கட்டிய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். 15 முதல் 18 சதவிகித வட்டியுடன் பணத்தைத் திரும்பத் தருவதாகக் கண்துடைப்புக்கு உறுதி அளித்து, காசோலைகளைக் கொடுத்துள்ளனர். ஆனால், அவை பவுன்ஸாக ஆரம்பித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பின்பு இவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் இவர் திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதத்தைத் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தைத் திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர அரசுக்கு அனுப்பி உள்ளது.  

திட்டம் போட்டு திருடுற கூட்டம், திருடிக்கொண்டே இருக்குது..!