Published:Updated:

எருமையை மீட்க லஞ்சம்; பணத்தை வாயில் போட்டு விழுங்கிய எஸ்.ஐ; வசமாக சிக்கியதன் வீடியோ!

லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்கிய எஸ்.ஐ

`காய்கள் வேகமாக நகரக் காசு தான் செல்லும்' என்பது போல, 10,000 ரூபாய் தந்தால்தான் மாட்டைக் கண்டுபிடிப்போம் என்று கூறியுள்ளார் அந்த அதிகாரி. சரி மாடு கிடைத்தால் போதும் என முதலில் 6,000 ரூபாயைக் கொடுத்துள்ளார்...

ஹரியானா பரிதாபாத் நகரில் வசித்து வருபவர் சுப்நாத் (Shubhnath). இவர் வளர்த்து வந்த எருமை மாடு சமீபத்தில் திருடு போய் உள்ளது. திருடு போன மாட்டை மீட்டுத் தருமாறு அப்பகுதியின் சப்-இன்ஸ்பெக்டரான மகேந்திர பால் என்பவரை நாடியுள்ளார். தன்னுடைய மாடு திருடுபோனதை குறித்து புகாரளித்து, விரைவில் மீட்டுத் தருமாறு இவர் கோரிக்கை வைத்துள்ளார்.

எருமை மாடு
எருமை மாடு
சித்தரிப்புப் படம்

ஆனால் `காய்கள் வேகமாக நகரக் காசு தான் செல்லும்' என்பது போல, 10,000 ரூபாய் தந்தால்தான் மாட்டைக் கண்டுபிடிப்போம் என்று கூறியுள்ளார் அந்த அதிகாரி. சரி மாடு கிடைத்தால் போதும் என முதலில் 6,000 ரூபாயைக் கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் நாம் `ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கக் கூடாது' எனச் சிந்தித்துள்ளார். 

அந்த சமயத்தில் எஸ்.ஐ மீதி 4,000 ரூபாய் பணத்தைக் கேட்க, கிட்டியது நல்ல சந்தர்ப்பம் எனப் பணத்தைக் கொடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையினருடன் சென்றுள்ளார். இவர் பணத்தைக் கொடுக்க அந்த பணத்தை லாவகமாக வாங்கியவர், அங்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருப்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வசமாகச் சிக்கியவர் உடனே, அந்த பணத்தை தன்னுடைய வாயில் போட்டு விழுங்கத் தொடங்கி உள்ளார். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதைத் தடுத்து விட்டனர். இதற்கிடையில் வேறொருவர் வந்து அதிகாரிகளை இடைமறித்தார். இவர்களுக்கிடையில் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  காவல் துறை அதிகாரி லஞ்சப் பணத்தை விழுங்க முயன்ற சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.