Published:Updated:

`ஆன்லைனில் வேலை; வீட்டிலிருந்தே பல லட்சம் சம்பாதிக்கலாம்’ - ஆசைக்காட்டி மோசடி செய்த கும்பல்

வேலை தருவதாகக் கூறி 23 லட்சம் மோசடி..! ( விகடன் )

ஆன்லைன் மூலம் வேலை தருவதாகக் கூறி 23 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

`ஆன்லைனில் வேலை; வீட்டிலிருந்தே பல லட்சம் சம்பாதிக்கலாம்’ - ஆசைக்காட்டி மோசடி செய்த கும்பல்

ஆன்லைன் மூலம் வேலை தருவதாகக் கூறி 23 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
வேலை தருவதாகக் கூறி 23 லட்சம் மோசடி..! ( விகடன் )

சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் கோதை. கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்திருக்கிறது. அதில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு கொடுப்பதாகவும், இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. எனவே, அதிலிருந்த லிங்கை கோதை பதிவிறக்கம் செய்துகொண்டார். இதில் ஒரு வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்தினால் வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு பல தவணையாக 10 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருக்கிறார். ஆனால், அதன் பிறகு அந்த எண்ணிலிருந்து வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த ஒரு தகவலும் வரவில்லை.

சமூக வலைதல குற்றத்தில்
சமூக வலைதல குற்றத்தில்

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோதை இது தொடர்பாக சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

மேலும், இதே போன்று சேலம் ஆசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்திருக்கிறது. அதிலும் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு கொடுப்பதாகக் கூறப்பட்டிருந்ததை நம்பி அவர் பல தவணையாக 13 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருக்கிறார். ஆனால், அதன் பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. இது குறித்து நடேசன் சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார். சம்பந்தப்பட்ட இரு புகார்களை ஏற்ற சைபர் க்ரைம் போலீஸார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.