Published:Updated:

18 நாள்களில் 1 கோடி ரூபாய் மோசடி... ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு சீல்; அன்றே எச்சரித்த விகடன்!

Gold ( Image by Nawal Escape from Pixabay )

விகடனில் `ஒரு லட்ச ரூபாய்க்கு, மாதம் 30,000 ரூபாய்!' - `ஆருத்ரா'வின் புதிய திட்டம்; உஷார் மக்களே உஷார்' என்ற தலைப்பில் ஒரு அலர்ட் கட்டுரை வெளியிட்டோம்.

18 நாள்களில் 1 கோடி ரூபாய் மோசடி... ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு சீல்; அன்றே எச்சரித்த விகடன்!

விகடனில் `ஒரு லட்ச ரூபாய்க்கு, மாதம் 30,000 ரூபாய்!' - `ஆருத்ரா'வின் புதிய திட்டம்; உஷார் மக்களே உஷார்' என்ற தலைப்பில் ஒரு அலர்ட் கட்டுரை வெளியிட்டோம்.

Published:Updated:
Gold ( Image by Nawal Escape from Pixabay )

கவர்ச்சிகரமான திட்டங்களைக் கூறி பொது மக்களிடம் தனியார் நிறுவனமான ஆருத்ரா கோல்டு கம்பெனி ஏமாற்றி வருவதாக எழுந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்து உள்ள சேவூரில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 3.41 கோடி (3,41,00,000) ரூபாய் பறிமுதல் செய்ததுடன் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

Money
Money

எங்கள் நிறுவனத்தில் 1 லட்சம் வரை டெபாசிட் செய்தால், மாதம் தோறும் 36,000 ரூபாய் வரை வட்டி தருவதாக ஆருத்ரா கோல்டு நிறுவனம் வெளியிட்டு மக்களை கவர்ந்தது. இதையடுத்து, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் இந்த விளம்பரத்தை நம்பி பலரும் டெபாசிட் செய்ய ஆரம்பித்தனர். ஏற்கெனவே பல நிறுவனங்கள் இப்படி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றியுள்ள நிலையில், விகடனில் `ஒரு லட்ச ரூபாய்க்கு, மாதம் 30,000 ரூபாய்!' - `ஆருத்ரா'வின் புதிய திட்டம்; உஷார் மக்களே உஷார்' என்ற தலைப்பில் ஒரு அலர்ட் கட்டுரை வெளியிட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இந்த விளம்பரமானது போலியானது என்ற செய்தி மக்களிடையே பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து ஆரணி சேவூரில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்திலும், சென்னை அமைந்தகரையிலும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். சுமார் 11 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை தொடர்ந்த நிலையில், இறுதியில் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

பணம்
பணம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வந்த ஆருத்ரா நிறுவனத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விளங்காடு கிராமத்தில் உள்ள ஆருத்ரா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரின் உறவினரான மணிகண்டன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 25,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 312 கிராம் தங்க நகையும் 650 கிராம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சோதனையில் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி.பழனி, `ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ஆரணி கிளை தொடங்கி 18 நாள்களில் 107 வாடிக்கையாளர்கள் சுமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கட்டியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விரைவில் கைது செய்வோம்' என்றவர், இறுதியில் `பொதுமக்கள் இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டத்தில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்' என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism