Published:Updated:

ஆருத்ரா கோல்டு கோல்மால்... அவர்கள் சுருட்டியது 1,100 கோடி... அரசு முடக்கியது 100 கோடி!

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

தமிழகம் முழுதும் நடைபெற்ற சோதனையில் 3.41 கோடி ரூபாய் பணத்தோடு 48 கணினிகள், 44 செல்போன்கள், 60 சவரன் தங்கம், 2 கார் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆருத்ரா கோல்டு கோல்மால்... அவர்கள் சுருட்டியது 1,100 கோடி... அரசு முடக்கியது 100 கோடி!

தமிழகம் முழுதும் நடைபெற்ற சோதனையில் 3.41 கோடி ரூபாய் பணத்தோடு 48 கணினிகள், 44 செல்போன்கள், 60 சவரன் தங்கம், 2 கார் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Published:Updated:
ஆருத்ரா கோல்டு நிறுவனம்

ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். மேலும், இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக வேறு சொத்துகள் உள்ளதா என்று தேடுதல் வேட்டையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்
ஆருத்ரா கோல்டு நிறுவனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஆருத்ரா கோல்டு’ நிறுவனம் அதிக வட்டி தருவதாக சர்ச்சையை கிளப்பிய நிறுவனம். சென்னை அமைந்தகரையை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதிலும் 20-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிறுவனம் வெளியிட்ட ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 36,000 வரை வட்டி வழங்கப்படும் என்ற விளம்பரத்தை நம்பி பலரும் முதலீடு செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வந்த விளம்பரத்தின் உண்மைத் தன்மையில் பல சிக்கல்கள் இருப்பதைக் கண்டு, இவ்விளம்பரம் தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஆருத்ராவுக்குச் சொந்தமான 26 இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, ஓசூர் போன்ற இடங்களில் தொடர் சோதனைகள் நிகழ்ந்தன.

தமிழகம் முழுதும் நடைபெற்ற சோதனையில் 3.41 கோடி ரூபாய் பணத்தோடு 48 கணினிகள், 44 செல்போன்கள், 60 சவரன் தங்கம், 2 கார் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான மோகன்பாபு மற்றும் பாஸ்கர் கைது செய்யப்பட்டனர்.

சீல்
சீல்

பொது மக்களிடம் முதலீடுகளைப் பெற்று 1,100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியுள்ளதாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர். நிறுவனத்துக்கு உரிய 74 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர்.

மேலும் இந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் வேறெதுவும் உள்ளனவா என்ற தேடுதல் வேட்டையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆருத்ரா கோல்டு கோல்மால் செய்து சுருட்டியது 1,100 கோடி. ஆனால், அரசு முடக்கியது வெறும் 100 கோடிதான்... மீதி பணம் என்ன ஆனது? என்பதுதான் கேள்வியாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism