Published:Updated:

தத்தெடுப்பு.. ரூ.1.3 கோடி இன்ஷூரன்ஸ் பணம்? - சிறுவன் கொலை வழக்கில் இருந்து தப்பித்த லண்டன் தம்பதி

தம்பதிகள்
தம்பதிகள் ( twitter )

கோபாலை தம்பதி இருவரும் தத்தெடுத்த பின்னர், சிறுவன் பெயரில் சுமார், 1 கோடிக்கும் அதிகமான இன்ஷூரன்ஸ் தொகையில் பதிவு செய்துள்ளனர். பணத்தைப் பெறுவதற்காக சிறுவனை ஆட்களை வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

லண்டனைச் சேர்ந்த கவல்ஜித்சின்ஹ் மகேந்திரசின்ஹ் ரைஜாடா மற்றும் ஆர்த்தி திர் ஆகிய தம்பதி இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த 11 வயதான கோபால் என்ற சிறுவனை கடந்த 2017-ஆம் ஆண்டு தத்தெடுத்துள்ளனர். தன்னுடைய புதிய பெற்றோர்களுடன் சேர்வதற்காக கோபால் தனது உறவினருடன், குஜராத்தில் அவர் தங்கியிருந்த கிராமத்திலிருந்து நகரத்திற்கு விசா ஏற்பாடு செய்வதற்காக சென்றுள்ளார்.

ரைஜாடாவின் தந்தையின் நண்பர் நிதிஷ் மண்ட் என்பவரிடம் அதற்கான ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு இருவரும் தங்களது கிராமத்திற்கு திரும்பி வரும் வழியில் பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவரையும் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட ஆழமான வெட்டுக்காயங்களால் சில நாட்களிலேயே இருவரும் இறந்துள்ளனர். தாக்கப்பட்டவர்களுக்கும் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரிவந்ததுள்ளது. குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

கொலை செய்யப்பட்ட சிறுவன்
கொலை செய்யப்பட்ட சிறுவன்

விசாரணையில், இந்த கொலைக்கும் விசா ஏற்பாடு செய்து கொடுக்கவிருந்த நிதிஷ்க்கு தொடர்பு இருப்பதாக தெரிவந்துள்ளது. இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கோபாலை தத்தெடுத்த லண்டனைச் சேர்ந்த தம்பதிகள் சிறுவனை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தம்பதியினருக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு இறங்கியது.

கோபாலை தம்பதிகள் இருவரும் தத்தெடுத்த பின்னர், சிறுவன் பெயரில் சுமார், ரூ.1 கோடிக்கும் அதிகமான இன்ஷூரன்ஸ் தொகை பதிவு செய்துள்ளனர். அந்தப் பணத்தைப் பெறுவதற்காக சிறுவனை ஆட்களை வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

கோபாலின் இறுதி சடங்கிலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதும் சிறுவனின் மரணம் தொடர்பாக குடும்பத்தினரிடம் எதுவும் பேசவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

``மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகன்?" - கூலிப்படை மூலம் கொலை செய்த சென்னைத் தாய்

நிதிஷின் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என கூறும்படி, ரைஜாடாவின் தந்தை கோபாலின் உறவினர்களுக்கு பணம் வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதிகாரிகள், இவர்கள் மூவருக்கும் இடையில் நடந்த தகவல் பரிமாற்றங்கள் உட்பட சில ஆதாரங்கள் இருப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டனர் ரைஜாடா தம்பதியினர். அதே நாளில் வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்பட்டனர். தொடர் விசாரணைகளுக்குப் பின்னர் 2018- ஆம் ஆண்டு ஜாமீனில் இருவரும் வெளிவந்தனர்.

விசாரணை ஒத்திவைப்பு மற்றும் தொடர் தாமதம் ஆகியவற்றிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜனவரியில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைகளில், இந்தியாவின் சிறை ஆய்வுக் குறித்தும் தம்பதிகள் மரண தண்டனையை எதிர்கொள்வார்களா என்றும் லண்டன் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது. கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனையைக் குறைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்றும் இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை நிராகரித்த தம்பதியினரின் வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்பில் குற்றங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட தண்டனைகளில் ஜனாதிபதி தலையிட அதிகாரமில்லை என்று வாதிட்டார்.

தத்தெடுப்பு.. ரூ.1.3 கோடி இன்ஷூரன்ஸ் பணம்? - சிறுவன் கொலை வழக்கில் இருந்து தப்பித்த லண்டன் தம்பதி

இந்த வாதத்தை இந்திய அரசும் நிரூபிக்க தவறியது. இதனால், தம்பதியினரை இந்திய அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மறுத்தது. இந்த வழக்கில் இந்திய அரசு மேல்முறையீடு செய்தது. நீண்ட ஆயுள் தண்டனையை அனுபவிக்க மாட்டார்கள் என்றும் நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்துள்ளது.

வழக்கு தொடர்பாக இந்த வாரம் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்தியாவில் இரட்டை கொலை வழக்கிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது. இந்த தண்டனை மனிதாபிமானத்தை மீறுகிறது என்பதன் அடிப்படையில் தம்பதியினரை ஒப்படைக்க போவதில்லை" என்று கூறியுள்ளது. அதேநேரம் லண்டனில் இருந்துகொண்டு இந்த கொலைக்கு இருவரும் திட்டமிட்டிருப்பது உறுதியானால் அதற்கான விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டுமென தம்பதியினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டிம் லாஃப்டன் பேசுகையில், ``குழந்தையை கொலை செய்தது தொடர்பான வழக்கில் சந்தேகத்திற்குரிய வகையில் கைதான கொலையாளிகள் தெருக்களில் நடமாடுவதைதான் நமக்கு விருப்பமான ஒன்றா? மிகவும் கொடூரமான குற்றம் இது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த தண்டனையை இந்திய அரசு முடிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வழியில் நாம் நிற்கக் கூடாது" என்று பேசியுள்ளார்.

குழந்தைகளை தத்தெடுக்க பெற்றோர்கள் அதிகளவில் முன்வரும் இன்றைய சூழலில் இந்த செய்தி உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு