Published:Updated:

நெல் கொள்முதல்: லஞ்சம்... முதல்வன் பட பாணியில் எடையில் முறைகேடு; ஆட்சியர் அதிரடி!

ஆவணிப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

லஞ்சம் கேட்ட அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ``இனி வரும் நாள்களில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் விஜிலன்ஸ் கமிட்டி அமைக்கப்படும்.

நெல் கொள்முதல்: லஞ்சம்... முதல்வன் பட பாணியில் எடையில் முறைகேடு; ஆட்சியர் அதிரடி!

லஞ்சம் கேட்ட அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ``இனி வரும் நாள்களில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் விஜிலன்ஸ் கமிட்டி அமைக்கப்படும்.

Published:Updated:
ஆவணிப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

விவசாயிகள், மாதக்கணக்கில் உழைத்து, போராடி அறுவடை செய்யும் நெல் மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க வேண்டுமானால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற அவலம் தொடர்கதையாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வளத்தி கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த நெல்கொள்முதல் நிலையத்தில் `விவசாயிகள், தங்களுடைய நெல் மணிகளை விற்பனை செய்ய வேண்டும் என்றால், 40 கிலோ அடங்கிய சிப்பத்துக்கு 40 ரூபாய் லஞ்சம் தர வேண்டும். மேலும், விவசாயிகள் கொண்டு வரும் 75 கிலோ மூட்டை ஒவ்வொன்றுக்கும் தலா 10 ரூபாயும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.' என்பது எழுதப்படாத விதியாக இருந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் சிலர், அதிகாரிகள் கேட்ட லஞ்சம் தர மறுத்துள்ளனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட துரைமுருகன், வளத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையம்
பணி நீக்கம் செய்யப்பட்ட துரைமுருகன், வளத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயிகள் லஞ்சம் தர மறுத்ததால் அவர்கள் கொண்டுவந்த நெல் மணிகளை நிலைய அதிகாரி எடைபோட மறுத்துள்ளார். இதனையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள், லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, இடையில் புகுந்த சிலர் விவசாயிகளை தாக்க பிரச்னை பெரிதாகியிருக்கிறது. பின்னர், போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளின் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றுள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையில், கொடுக்கண்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் வளத்தி கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெறப்படுவது தொடர்பாக தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகார் அளித்துள்ளார். விவரங்களைக் கேட்டுக்கொண்ட அந்த அதிகாரி, விழுப்புரம் மாவட்ட ஆர்.எம்.ஓ தொலைபேசி எண்ணைக் கொடுத்து, ``அவரிடம் பேசுங்கள்" என்று கூறி தன் கடமையிலிருந்து விலகியுள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிட மிருந்து ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்த பிறகும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டதுடன், கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கும் விவசாயிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரியிடமே பேசிக்கொள்ளுமாறு திசை திருப்பிவிடும் செயலும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

இந்த ஆடியோ தொடர்பாக விவசாயி கோபிநாத்திடம் பேசினோம். ``என்னுடைய நிலத்தில் விளைந்த 105 நெல் மூட்டைகளை (75 கிலோ வீதம்) வளத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த 15-ம் தேதி கொண்டு போனேன். நெல் மணிகளை 40 கிலோ சிப்பமாக எடை போட்டபோது, மொத்தம் 7,920 கிலோ இருந்தது. கிலோ ஒன்றுக்கு 1 ரூபாய் வீதம் 7,920 ரூபாயும், நான் கொண்டு சென்ற மூட்டைகளுக்கு 10 ரூபாய் வீதம், 1,000 ரூபாயும் கேட்டாங்க. அங்கு வேலை செய்பவர்கள், `தங்களுக்கு அரசாங்கம் சம்பளமே கொடுப்பதில்லை. இவ்வாறு வாங்கிதான் நாங்கள் பிழைக்கிறோம்' என்று அப்பட்டமாகப் பொய் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் லஞ்சம் கொடுக்க விரும்பலை. அதனால்தான், 16-ம் தேதி கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து புகார் சொன்னேன். ஆனால், அவங்க கொடுத்த மாவட்ட நம்பருக்கு போன் போட்டால் யாரும் எடுக்கவேயில்லை. அதன் பின்னர்தான், விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அப்போதும் நடவடிக்கை இல்லாததால், கடந்த 26-ம் தேதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். 27-ம் தேதி அன்று, அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். விவசாயிகள் தங்களிடம் உள்ள வீடியோ, ஆடியோ ஆதாரங்களை அதிகாரிகளிடம் கொடுத்தார்கள். அதன் பிறகு, மேற்பார்வையாளர் துரைமுருகனை சஸ்பெண்ட் செய்தனர்" என்றார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்

இந்நிலையில், நேற்று மாலை (28.04.2022) ஆவணிப்பூர் நேரடொ நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 49 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் 1,000 மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்து வருகிறோம். கடந்த வாரம்கூட, காணை ஒன்றியத்தில் 15,000 மெட்ரிக் டன் அளவு கொண்ட திறந்தவெளி நேரடி நெல் சேமிப்புக் கிடங்கு ஒன்றை நிறுவியிருக்கிறோம். வளத்தியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், லஞ்சம் வாங்குவதாக வந்த செய்திகளைக் கேள்விப்பட்டு அங்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தேன். பின்னர், விசாரணை அடிப்படையில் துரைமுருகன் எனும் நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது, அவர் நிரந்தரமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

லஞ்சம்
லஞ்சம்
Representational Image

இன்று ஆவணிப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது, எடைபோடும் இயந்திரத்தில் கூடுதலாக ஒரு கிலோ இருக்கும் வகையில் அளவீட்டை மாற்றி வைத்திருந்தனர். அதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். இனி வரும் நாள்களில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்துக்கும் `விஜிலன்ஸ் கமிட்டி' ஒன்று செயல்படும்படி உருவாக்கியுள்ளோம்.

அந்த விஜிலென்ஸ் அதிகாரிகள், இதுபோன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது தவறு நிரூபிக்கப்படும்பட்சத்தில் லோடுமேனாக இருந்தாலோ... துறை அதிகாரியாக இருந்தாலோ... சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெயர், பதவியுடன் கூடிய தொலைபேசி எண்ணை வைக்கும்படியும், புகார் பெட்டியை வைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், இதுபோன்ற திடீர் ஆய்வுகளும் தொடரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism