Published:Updated:

`போக்ஸோ சட்டத்தில் கைதான தேனி அ.தி.மு.க நிர்வாகி' - கட்சியை விட்டே நீக்கிய தலைமை

அ.தி.மு.க நிர்வாகி கணேசன்
அ.தி.மு.க நிர்வாகி கணேசன்

தனது வீட்டின் அருகே வசித்துவரும் சிறுமிக்கு, பிஸ்கட் வாங்கிக்கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க நிர்வாகி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது கோம்பை. இங்கு வசித்துவரும் பெண் ஒருவர், நேற்று கோம்பை காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். `என் வீட்டின் அருகே வசிக்கும் அ.தி.மு.க கோம்பை பேரூர் கழகப் பொருளாளர் கணேசன் (வயது 61) என்பவர், தனது இரண்டரை வயது மகளை அடிக்கடி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவந்தார்.

`தாராவி டு தேனி; 30 பயணிகள்; போலி இ-பாஸ்!’ - அதிரவைத்த ஆம்னி பேருந்து மோசடி
அ.தி.மு.க நிர்வாகி கணேசன்
அ.தி.மு.க நிர்வாகி கணேசன்

அதனை நான் பலமுறை கண்டித்தேன். இன்றும் அதேபோல அவர் என் மகளை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, பின் வெளியே வந்து விட்டார். நான் என் மகளை தூக்கிக்கொண்டு, அவரிடம் சத்தம் போட்டேன். `உன் மகளுக்கு பிஸ்கட் தானே வாங்கிக்கொடுத்தேன்’ என கூறினார். வீட்டிற்கு வந்து என் மகளை குளிக்க வைக்கும்போது, அவளை யாரோ பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிந்தது’ என அப்புகாரில் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறை, கணேசன், அச்சிறுமிக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர். உடனடியாக கணேசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த கோம்பை போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறார் வதை
சிறார் வதை

இச்சம்பவம், தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அ.தி.மு.க தலைமைக்கழகத்திலிருந்து அறிவிப்பு வெளியானது. அதில், `கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோம்பை பேரூர் கழகப் பொருளாளராக இருக்கும் கணேசன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு