Published:Updated:

3 வயது குழந்தைமீது தீ வைத்த தாய்; போலீஸில் புகாரளித்த பாட்டி! - என்ன நடந்தது?

குழந்தைமீது தீ வைத்த தாய்

தன்னுடைய 3 வயதுக் குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரத்தில் குழந்தையை தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

3 வயது குழந்தைமீது தீ வைத்த தாய்; போலீஸில் புகாரளித்த பாட்டி! - என்ன நடந்தது?

தன்னுடைய 3 வயதுக் குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரத்தில் குழந்தையை தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
குழந்தைமீது தீ வைத்த தாய்

பஞ்சாப்பில் உள்ள சுடானி கலான் கிராமத்தில் ரூபிந்தர் கௌர் என்ற பெண் அவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரைப் பிரிந்து தன்னுடைய தாய் வீட்டில் தன் மூன்று குழந்தைகளுடன் வசித்துவருகிறார். திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மனஉளைச்சலால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பெண் தன்னுடைய 3 வயதுக் குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரத்தில் குழந்தையை தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

குழந்தையை கொளுத்திய தாய்
குழந்தையை கொளுத்திய தாய்
மாதிரிப்படம்

அதைத் தொடர்ந்து, 60 சதவிகித தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தை சண்டிகரிலுள்ள PGIMER மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில் குழந்தையின் பாட்டி மஞ்சித் கௌர் அளித்த புகாரின் பேரில், தாய் ரூபிந்தர் கௌர்மீது போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு, ``கணவருடனான பிரச்னை காரணமாக மனஅழுத்தத்தில் இருந்த அந்தப் பெண் தன் குழந்தைமீது தீ வைத்திருக்கிறார். அதில் காயமடைந்த குழந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலதிக சிகிச்சைக்கு அங்கிருந்து லூதியானா சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

பின்னர் சண்டிகரில் உள்ள PGIMER-க்கு அனுப்பிய மருத்துவர்கள், குழந்தையை தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். குழந்தையைக் கொலைசெய்ய முயன்ற அந்தப் பெண்ணின்மீது இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டம் பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.