Published:Updated:

`வேறு ஒருவருடன் நீ எப்படிப் பேசலாம்?' - நாகை மாணவி மீது ஆசிட் வீசிய பல்கலைக்கழக மாணவர்

ஜி.சதாசிவம்

தன்னுடைய காதலி வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரமடைந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை
மருத்துவமனை

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய கணேசனும் (பெயர் மாற்றம்), கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது உஷாவும் (பெயர் மாற்றம்) உறவினர்கள். இவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவி வேறு ஒருவருடன் பழகியதால் கணேசன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

நேற்று இரவு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருத்தினர் மாளிகை அருகில் உஷாவிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார் கணேசன். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மாணவியின் மீது ஊற்றியுள்ளார். இதனால் எரிச்சல் தாங்காமல் மாணவி அலறியதால் அருகில் இருந்தவர்கள் மாணவியை அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

``மாமா, என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே!”- அழகுக்கலை நிபுணரின் உடலுக்கு உரிமை கோரிய காதலி, 2 மனைவிகள்

மாணவர் கணேசனையும் அங்கிருந்தவர்கள் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கணேசனும் அதே மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.