Published:Updated:

`சந்தேகம் எழுப்பிய தாய்; காட்டிக்கொடுத்த டி.என்.ஏ ரிப்போர்ட்!'-கோவை சிறுமி கொலையில் திடீர் திருப்பம்

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

கோவை சிறுமி
கோவை சிறுமி

கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த 1-ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் 25-ம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதையடுத்து, அடுத்த நாள் வீட்டின் எதிரே துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

கோவை சிறுமி பாலியல் வழக்கு
கோவை சிறுமி பாலியல் வழக்கு

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், சந்தோஷ்குமார் என்பவரை மார்ச் 31-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

சந்தோஷ்
சந்தோஷ்

இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் வனிதா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து வனிதாவிடம் பேசியபோது, ``சந்தோஷுக்கு எப்படியும் தண்டனை கிடைச்சுடும்னு என்று சந்தோஷமா இருந்தேன்.

கோவை சிறுமி
கோவை சிறுமி

ஆனா, நேத்து என் வழக்கறிஞர் வந்து, இதுல இன்னொருத்தனுக்கும் தொடர்பு இருக்கறதா சொன்னார். எங்க குழந்தை உடலில், சந்தோஷ் மட்டும் இல்லாம, இன்னொருத்தரோட டி.என்.ஏ படிவமும் கலந்துருக்கறதா டி.ஏன்.ஏ ரிப்போர்ட்ல வந்துருக்குனு அவர்தான் சொன்னார்.

அதனாலதான், இன்னிக்கு மனு கொடுக்க வந்துருக்கேன். என் குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைதான் பண்ணிருக்காங்கனு நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருந்தேன்.

Vikatan

அதைதான் ரிப்போர்ட்லயும் சொல்லிருக்காங்க. போலீஸ் சரியா விசாரணை நடத்திருந்தா, அவனையும் அப்பவே பிடிச்சுருக்கலாம். என் குழந்தையோட கொலைக்குக் காரணமான எல்லாருக்கும் தண்டனை வழங்கணும்” என்றார்.