Published:Updated:

புதுக்கோட்டை: குளிக்கச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு நேர்ந்த துயரம்... விடாமல் துரத்தும் `தீண்டாமை'

புதுக்கோட்டை

குளித்துக்கொண்டிருந்த பட்டியல் சமூகத்துப் பெண்களை, `இந்தக் கண்மாயில் குளிக்கக் கூடாது' என்று மிரட்டியதோடு, ஆபாசமாகவும் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

புதுக்கோட்டை: குளிக்கச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு நேர்ந்த துயரம்... விடாமல் துரத்தும் `தீண்டாமை'

குளித்துக்கொண்டிருந்த பட்டியல் சமூகத்துப் பெண்களை, `இந்தக் கண்மாயில் குளிக்கக் கூடாது' என்று மிரட்டியதோடு, ஆபாசமாகவும் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பெருங்காடு கண்மாயில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், குளித்துக்கொண்டிருந்த பட்டியல் சமூகத்துப் பெண்களை, `இந்தக் கண்மாயில் குளிக்கக் கூடாது' என்று மிரட்டியதோடு, ஆபாசமாகவும் பேசியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், முள் காட்டுக்குள் பெண்களின் துணிகளைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து நாகுடி போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமறைவான ஐயப்பன், முத்துராமன் ஆகியோரைத் தேடிவருகின்றனர். இறையூரில் பட்டியல் சமூகத்தினரிடம் சாதியத் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதாக ஏற்கெனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்கள்

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், கீரனூர் அருகே தொடையூர், அறந்தாங்கி அருகே கூத்தங்குடி என அடுத்தடுத்த தீண்டாமைச் சம்பவங்கள் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்து பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகப் பெண்களிடம் பேசியபோது, ``அன்னைக்கு கண்மாயில குளிச்சுக்கிட்டு இருந்தோம். அப்போ அங்கே வந்த மாற்றுச் சமூகக்காரங்க, `உங்களைத்தான் இந்தக் குளத்துல குளிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கோம்ல... அப்புறம் ஏன் வர்றீங்க'ன்னு சாதிச் பெயரைச் சொல்லி இழிவா பேசுனாங்க. அதோடு, எங்க உடை எல்லாத்தையும் தூக்கி முள்ளுக்காட்டுக்குள்ள போட்டுட்டாங்க. அதுக்கு மேல, அங்கே இருந்தா பாதுகாப்பு இல்லைன்னு ஈரப் பாவாடையோட வீட்டுக்கு ஓடுனோம். அப்பவும் எங்களைத் துரத்திக்கிட்டு வந்தாங்க. எப்பதான் எங்களை நிம்மதியா வாழவிடப் போறாங்கன்னு தெரியலை" என்றனர் ஆதங்கமாக.