Published:Updated:

விபத்தில் சிக்குபவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்களா?

ஆம்புலன்ஸ்

சாலை விபத்தில் சிக்குபவர்கள் அரசின் `108 ஆம்புலன்ஸ்' மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாக எழுந்த புகாரில் சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க உத்தரவு.

விபத்தில் சிக்குபவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்களா?

சாலை விபத்தில் சிக்குபவர்கள் அரசின் `108 ஆம்புலன்ஸ்' மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாக எழுந்த புகாரில் சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க உத்தரவு.

Published:Updated:
ஆம்புலன்ஸ்

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு, மோட்டார் வாகன விபத்தில் போலி காப்பீடு கோரிய விவகாரம் தொடர்பாக விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்திருந்தது. சமீபத்தில் இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது, சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்குப் பிறகு மட்டும், ஓசூரில் அமைந்திருக்கும் `மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில்' 11.7 கோடி ரூபாய் காப்பீடு கோரிய 84 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட விவகாரம் குறித்து, விண்ணப்பதாரர்களை அழைத்து அவர்களின் ஒப்புதலுடன்தான் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டனவா என்பதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையின்போது பேசிய வழக்கறிஞர் விஜயராகவன், சாலை விபத்தில் காயம் அடைபவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்படாமல், தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை
மாதிரி படம்

அதையடுத்து, மோட்டார் வாகன விபத்து காப்பீடு மோசடி குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக்குழு, இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை தொடர்பான புகாரையும் விசாரித்து, வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது?

எந்த நோயாளியாக இருந்தாலும், 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். அருகில் அரசு மருத்துவமனை இல்லாத பட்சத்தில் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லலாம் என்பது விதி. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தவறாகப் பயன்படுத்தி, சாலை விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திட்டமிட்டு தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வில்லியம்ஸ்
வில்லியம்ஸ்

மருத்துவமனை நிர்வாகத்துடன், சில 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பேசிவைத்துக்கொண்டு இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் பெயர்கள் முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய ஏஜென்ட்டாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட, நாகையைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வில்லியம்ஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், சிலர் இந்த விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

என்ன நடக்கிறது?

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தனியார் நிறுவனம் ஒன்றுதான் டெண்டர் முறைப்படி எடுத்து நடத்திவருகிறது. ஆனால், ஒரு சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தனியார் மருத்துவமனைகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஆம்புலன்ஸில் ஏற்றும் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அப்படிக் கொண்டு செல்லும் நோயாளிகளின் மூலம் பணமாகவோ அல்லது காப்பீடு அட்டை மூலமாகவோ அந்த தனியார் மருத்துவமனைகள் பயனடைவதாகக் கூறப்படுகிறது.

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்

அரசின் 108 ஆம்புலன்ஸில் ஏறும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு, அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் கமிஷன் தொகை கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து முதல் உடல்நலக் குறைபாடு வரை நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவமனை மற்றும் கமிஷனைப் பொறுத்து, நோயாளிகள் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், அரசு சார்பில் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணையின் மூலம் இன்னும் பல்வேறு உண்மைகள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism