Published:Updated:

`யார் சிறந்த மெக்கானிக்?!' - தடையை மீறி விழுப்புரத்தில் நடந்த ஆட்டோ ரேஸ்

சீறிப்பாய்ந்த ஆட்டோக்கள் - விழுப்புரம்

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், தடையை மீறி ஆட்டோ பந்தயம் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`யார் சிறந்த மெக்கானிக்?!' - தடையை மீறி விழுப்புரத்தில் நடந்த ஆட்டோ ரேஸ்

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், தடையை மீறி ஆட்டோ பந்தயம் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சீறிப்பாய்ந்த ஆட்டோக்கள் - விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்துக்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ பந்தயம் நடைபெற்றுள்ளது. கடந்த 12-ம் தேதி அதிகாலையில், அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்தப் பந்தயம், `யார் சிறந்த மெக்கானிக்?' என நிரூபிப்பதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விழுப்புரம், சென்னைப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு ஆட்டோக்கள் இந்த ரேஸில் பங்கு பெற்று சீறிப்பாய்ந்துள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட விழுப்புரம் ஆட்டோ
பறிமுதல் செய்யப்பட்ட விழுப்புரம் ஆட்டோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த ஆட்டோக்களைச் சுற்றியும், அவர்களின் ஆதரவாளர்கள் இருசக்கர வாகனம் மூலம் கூச்சலிட்டபடி செல்கின்றனர். இந்தக் காட்சிகளை இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், தடையை மீறி நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில் முதலிடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த நபருக்கு 10,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறதாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆட்டோ ரேஸ் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானதோடு, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தடையை மீறி நடத்தப்பட்ட இந்த ஆட்டோ பந்தயம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், பந்தயத்தில் பங்கு பெற்ற விழுப்புரம் ஆட்டோ ஒன்றைப் பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்
விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். "ஒரு ஆட்டோ மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் யாரும் பிடிபடவில்லை. சரியான காரணம் அறியப்படாததால், பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிலர் என்றுதான் வழக்கு பதியப்பட்டுள்ளது. விவரங்கள் தெரியவரும் பட்சத்தில் தகவல் கூறுகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism