Published:Updated:

`தனிமைப்படுத்தப்பட்டதால் மனநிலை பாதிப்பு' -இலங்கை ரிட்டர்ன் போடி நபரால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

மணிகண்டன்
மணிகண்டன்

தனது வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த 90 வயது மூதாட்டியான நாச்சியம்மாளைக் கழுத்தில் கடித்துள்ளார் மணிகண்டன்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், கொரோனா நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, `வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள்?' எனக் கேள்வி முன்வைக்கப்பட்டது. `அதற்காகத்தான் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய மருத்துவ ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை தொடர்புகொண்டால், தேவையான உதவிகளைச் செய்துகொடுப்பார்கள்' என்றார்.

அன்று வேப்பிலை... இன்று ஸ்டிக்கர் - கொள்ளை நோய் நாள்களின் நினைவைப் பகிரும் தேனி பாட்டிகள்
மணிகண்டன்
மணிகண்டன்

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்படும் மனரீதியிலான பாதிப்பைச் சரி செய்ய தீவிர நடவடிக்கை தேவை என்பதை நிரூபிக்கும் வகையில், தேனி மாவட்டம் போடியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடி அருகே உள்ளது ஜக்கமநாயக்கன்பட்டி. இக்கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் என்ற இளைஞர், இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு வந்தவரை, மாவட்ட சுகாதாரத்துறை, வீட்டுக் கண்காணிப்பில் வைத்துள்ளது.

`போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், ஆதரவற்றோருக்காக சமுதாய உணவுக்கூடங்கள்!’ - அசத்தும் தேனி
மணிகண்டன்
மணிகண்டன்

இந்நிலையில், நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே வந்த மணிகண்டன், பக்தசேவா தெருவில், தனது வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த 90 வயது மூதாட்டியான நாச்சியம்மாளின் கழுத்தில் கடித்துள்ளார். நாச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், மணிகண்டனைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களையும் மணிகண்டன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், அனைவரும் சேர்ந்து மணிகண்டனைப் பிடித்துக் கயிற்றால் கால் மற்றும் கைகளை கட்டிப்போட்டனர். படுகாயமடைந்த நாச்சியம்மாள், போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி கானவிலக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மணிகண்டன், கொரோனா கண்காணிப்பில் இருப்பதால், உடனடியாக, போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், படுகாயமடைந்த நாச்சியம்மாள், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மணிகண்டன்
மணிகண்டன்

இது தொடர்பாக போடி போலீசாரிடம் கேட்டபோது, ``மூதாட்டியைக் கடித்தபோது, அருகே இருந்த மக்கள், உடனடியாக மணிகண்டனைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். அவரது கையில், சுகாதாரத்துறையின் சீல் வைக்கப்பட்டிருப்பதை வைத்தே, அவர் கொரோனா கண்காணிப்பில் இருப்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்டது போல நடந்துகொண்டார். தற்போது மூதாட்டி இறந்துள்ள நிலையில், மணிகண்டன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் ஆலோசனையின் பேரில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

கொரோனா கண்காணிப்பில் இருந்த மணிகண்டன், தெருவில் சுற்றித்திருந்தது மட்டுமல்லாமல், வீட்டு வாசலில் படுத்திருந்த மூதாட்டியைக் கடித்துக் கொலை செய்த சம்பவம், தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு