Published:Updated:

``இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்..." - வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை?

தற்கொலை ( Representational image )

"சொந்தங்கள் இருந்தும் யாரும் இல்லாத நிலை எங்களுக்கு. சொந்தங்கள், அன்பு காண்பித்து ஆறுதலாகக்கூட இல்லை. ஆகையால் எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை."

``இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்..." - வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை?

"சொந்தங்கள் இருந்தும் யாரும் இல்லாத நிலை எங்களுக்கு. சொந்தங்கள், அன்பு காண்பித்து ஆறுதலாகக்கூட இல்லை. ஆகையால் எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை."

Published:Updated:
தற்கொலை ( Representational image )

விழுப்புரம் கே.கே.சாலையிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்தவர் சுசீந்தரன் (54). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் இவருக்கு, திருமணம் ஆகவில்லை. இவரின் தங்கை பெயர் ரேவதி (50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரபல தமிழ் நடிகை ஒருவரின் தம்பியைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் ரேவதி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தன் அண்ணன் வீட்டிலேயே வசித்துவந்தாராம்.

அண்ணன், தங்கை இருவரும் வசித்துவந்த வீட்டில் நேற்று (13.02.2022) திடீரென துர்நாற்றம் வீசியிருக்கிறது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், விழுப்புரம் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அண்ணன், தங்கை
தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அண்ணன், தங்கை

உடனே அங்கு விரைந்துவந்த காவல்துறையினர், மூடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சுசீந்தரன், ரேவதி இருவரும் தூக்கில் தொடங்கியபடி காணப்பட்டுள்ளனர். அழுகிய நிலையில் இருந்த அவ்விரு உடல்களையும் மீட்ட காவல்துறை அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அப்போது, அந்த அறையிலிருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று படிப்போரின் மனங்களை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ரேவதி எழுதிக்கொள்வது...’’ எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், ``என்னுடைய அண்ணன் சுசீந்தரன் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர். 15 வருடங்களாக மருத்துவமனைகளில் காண்பித்துவருகிறோம். எங்களுடன் வசித்துவந்த எங்களின் தாயார், அண்மையில் உயிரிழந்ததுதான் எங்களை மிகவும் பாதித்தது. நான் என் கணவரைப் பிரிந்து 2.5 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்குக் குழந்தையும் கிடையாது. இவை அனைத்தும் சேர்ந்து எனக்கு மனதளவில் மிகவும் பாதிப்பாகிவிட்டது. மன அழுத்தம் காரணமாக B.P வந்துவிட்டது. அரசு மருத்துவமனையில் காண்பித்து மாத்திரை சாப்பிட்டுவருகிறேன்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
தே.சிலம்பரசன்

தனிமை என்னை மிகவும் பாதிக்கிறது. மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பு ஏற்பட்டதால் என்னால் நிரந்தரமாக வேலை ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஆகையால், வருமானத்துக்கும் எங்களுக்கு வழியில்லை. என்னுடைய அண்ணன் நல்லா இருப்பதைப்போல இருக்கும், திடீரென மனநிலை மாறிப்போகும். அவரை வீட்டில்விட்டு என்னால் ரொம்ப நேரம்கூட வெளியில் செல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எங்களால் இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் நாங்கள் இறப்பதற்கு முடிவு செய்தோம்.

சொந்தங்கள் இருந்தும் யாரும் இல்லாத நிலை எங்களுக்கு. சொந்தங்கள் அன்பு காண்பித்து ஆறுதலாகக்கூட இல்லை. ஆகையால் எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நாங்கள் இருவரும் மட்டுமேதான் பேசி முடிவு செய்தோம். வீட்டில் உள்ள பொருள்களை விற்று மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அம்மாவுக்கு ரூ.24,000 கொடுத்துவிடு. மன்னிக்கவும்" என்று மனக்குமுறல்களை பதிவிட்டு எழுதப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

வறுமையின் காரணமாக அண்ணன், தங்கை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் காவல்துறையினர்.