Published:Updated:

`ஆண் நண்பருடன் நட்பு; மாயமான நகை, பணம்!' - தாயின் தவறால் விபரீத முடிவெடுத்த மகன்கள்

புதுக்கோட்டை சகோதரர்கள்
புதுக்கோட்டை சகோதரர்கள்

வீட்டில் நெருக்கடி அதிகமானதால், நகை, பணத்துடன் ஜெயதீபா தன் ஆண் நண்பருடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் வெங்காடாச்சலம்-ஜெயதீபா தம்பதிக்கு விக்னேஸ்வரன் (22), யோகேஸ்வரன்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். விக்னேஸ்வரன் பி.காம் படிப்பையும் யோகேஸ்வரன் பாலிடெக்னிக்கும் படித்து வந்தார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஜெயதீபா தன் இரண்டு மகன்களுடன் நமுணசமுத்திரத்தில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறையில் விக்னேஸ்வரனும் யோகேஸ்வரனும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் சகோதரர்கள் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, நமுணசமுத்திரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

தூக்கு தண்டனை குற்றவாளிகள் 6 பேர் கருணை மனு நிராகரிப்பு!
தூக்கு தண்டனை குற்றவாளிகள் 6 பேர் கருணை மனு நிராகரிப்பு!

விசாரணையில், சில ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து தன் மகன்களுடன் அம்மா வீட்டில் வசித்து வந்த ஜெயதீபா, நமுண சமுத்திரம் பகுதியில் வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். வட்டிக்குப் பணம் கொடுத்த இடத்தில், அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தவறான நட்பாக மாறியுள்ளது.

அவரிடம் ஜெயதீபா அதிகளவில் பணம், நகைகளைக் கொடுத்துள்ளார். இதுபற்றி ஜெயதீபாவின் பெற்றோர், பிள்ளைகளுக்குத் தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும், தவறான நட்பை ஜெயதீபா கைவிடவில்லை. வீட்டில் நெருக்கடி அதிகமானதால், நகை, பணத்துடன் ஜெயதீபா தன் ஆண் நண்பருடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் இதுபற்றி விசாரிக்கவே, சகோதரர்கள் இருவரும் கடுமையான மன உளைச்சலிலிருந்துள்ளனர். தாய் போன அவமானம் தாங்க முடியாமல் சகோதரர்கள் இருவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தாயின் தவறான செயலால் வாழவேண்டிய இரு சகோதரர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு