Published:Updated:

`பள்ளி மாணவர்கள் புத்தகப்பைகளில் சிகரெட், காண்டம், குட்கா போதை வஸ்துகள்!' - பெங்களூரு அதிர்ச்சி

பள்ளி மாணவர்கள் ( சித்திரிப்புப் படம் )

மாணவர்கள் செல்போன் பயன்படுத்துகிறார்களா என ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது, மாணவர்களின் பைகளை திறந்த ஆசிரியர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

`பள்ளி மாணவர்கள் புத்தகப்பைகளில் சிகரெட், காண்டம், குட்கா போதை வஸ்துகள்!' - பெங்களூரு அதிர்ச்சி

மாணவர்கள் செல்போன் பயன்படுத்துகிறார்களா என ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது, மாணவர்களின் பைகளை திறந்த ஆசிரியர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

Published:Updated:
பள்ளி மாணவர்கள் ( சித்திரிப்புப் படம் )

கர்நாடக மாநிலத்தின், 31 மாவட்டங்களில் மொத்தம், 76,450 பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில், 49,690 அரசுப் பள்ளிகள், 7,110 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 19,650 தனியார் பள்ளிகள் இருக்கின்றன.

இந்த நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் பெங்களூரிலுள்ள 30-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் செல்போன் பயன்படுத்துகிறார்களா என ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது, மாணவர்களின் பைகளை திறந்த ஆசிரியர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

8 முதல் 10–ம் வகுப்பு வரையில் படிக்கும், 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பைகளில் காண்டம், சிகரெட், லைட்டர், குட்கா சார்ந்த போதைப்பொருள்கள், வொயிட்னர் என பலவகை பொருள்களும், சிலரிடம் அதிகமாக பணமும் இருந்தது.

குட்கா பொருள்கள்
குட்கா பொருள்கள்

பெங்களூரு நகரிலுள்ள பல பள்ளிகளில் சோதனை செய்ததில், மாணவர்களின் பைகளில் இதேபோன்று பொருள்கள் இருந்ததால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். சட்ட விரோத பொருள்கள் வைத்திருந்த மாணவர்களின் பெற்றோரிடம் ஆலோசனையும் நடத்தினர்.

கர்நாடக பள்ளி கல்வித்துறை.
கர்நாடக பள்ளி கல்வித்துறை.

இதனையடுத்து, கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை நேற்று, மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அடிக்கடி திடீர் சோதனை செய்து, `மாணவர்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். போதை பழக்கத்தில் சிக்கியிருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, பெற்றோரிடம் மாணவர்களின் செயல்பாடுகளை கவனிக்க வலியுறுத்த வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறது.

டிரக் மாஃபியாக்களின் டார்கெட் மாணவர்களா?

இது குறித்து பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸார் மற்றும், ஐ.ஜி அளவிலான சில போலீஸாரிடம் பேசினோம். ``தற்போது, பெங்களூரு பகுதியில் மாணவர்கள் அதிக அளவு, மது, சிகரெட், குட்கா சார்ந்த போதைப்பொருள்கள் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் கஞ்சா, போதை ஊசி பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. சில மாணவர்கள், கஞ்சாவை சக மாணவர்களிடம் விற்பனை செய்து சம்பாதிப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

கஞ்சா.
கஞ்சா.

மாணவர்களிடையே சட்ட விரோத போதைப்பொருள்கள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ‘டிரக் மாஃபியாக்கள்’ மாணவர்களை ‘டார்கெட்’ செய்து கஞ்சா, போதை ஊசி விற்பனை செய்கிறார்களா, மாணவர்களை இடைத்தரகர்களாக பயன்படுத்தி விற்பனையை பரவலாக்குகிறார்களா என, மாநிலம் முழுதும் கண்காணிக்கிறோம்'' என்றனர்.

கர்நாடகா மட்டுமல்ல, தமிழகத்திலும் மாணவர்களிடையே போதைப்பொருள்கள் பயன்பாடு சர்வசாதாரணமாகிவிட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.