Published:Updated:

``2 ஆண்டுகளில் 21 பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள்மீது தீண்டாமை வன்கொடுமைகள்!” - எவிடென்ஸ் அமைப்பு

எவிடென்ஸ் கதிர்

``பட்டியலினத்தவர்கள், பஞ்சாயத்து, நகர்ப்புற உள்ளாட்சிப் பொறுப்புக்கு வருகிறபோது மாற்றுச் சமூகத்தினரில் சிலர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சாதிரீதியாக இத்தகைய தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இது அப்பட்டமான சாதிய வன்கொடுமை.

``2 ஆண்டுகளில் 21 பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள்மீது தீண்டாமை வன்கொடுமைகள்!” - எவிடென்ஸ் அமைப்பு

``பட்டியலினத்தவர்கள், பஞ்சாயத்து, நகர்ப்புற உள்ளாட்சிப் பொறுப்புக்கு வருகிறபோது மாற்றுச் சமூகத்தினரில் சிலர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சாதிரீதியாக இத்தகைய தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இது அப்பட்டமான சாதிய வன்கொடுமை.

Published:Updated:
எவிடென்ஸ் கதிர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 21 பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள்மீது சாதிரீதியான தீண்டாமை வன்கொடுமைகள் நடந்துள்ளதாக மதுரை எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

சமத்துவ நாள்
சமத்துவ நாள்
ட்விட்டர்

சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகக் கடைபிடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் சமத்துவ உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிலையில், பட்டியலின பஞ்சாயத் தலைவர்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து மனித உரிமைச் செயல்பாட்டாளரான எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கதிரிடம் பேசினோம். ``பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள்மீதும் நடைபெறக்கூடிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. பட்டியலினத்தவர் ஒருவர் அதிகாரத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதி வெறியர்கள் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

கடந்த இரண்டு வருடங்களில் 21 சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் மட்டும் இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் இரண்டு நடந்துள்ளன. தென்காசி அருகிலுள்ள ஊத்துமலை, இதுவரை பொதுப் பஞ்சாயத்தாக இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு இந்தத் தொகுதி பட்டியலினப் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊத்துமலை கூட்டுறவு வங்கிச் செயலாளராக இருக்கும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த அய்யனார், தன் மனைவி வளர்மதியைத் தேர்தலில் நிறுத்த முயன்றிருக்கிறார். இதனால் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஊத்துமலை முன்னாள் ஊராட்சித் தலைவர் தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியன் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.

சிவக்கனி என்பவர் மூலம் அய்யனார்மீது பல பொய்ப் புகார்களை அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பது, மிரட்டுவது எனப் பல்வேறு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பொய்ப் புகாரால் ஒரு கட்டத்தில் அய்யனார் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

சாதி
சாதி

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊராட்சித் தேர்தலில் ஊத்துமலை ஊராட்சியில் வளர்மதி நிற்க எதிர்ப்பு தெரிவித்து ராஜகுமாரி என்கிற பெண்ணை தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியன் நிறுத்தினாலும் வளர்மதி வெற்றிபெற, ஆத்திரமடைந்த தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியனின் அக்காள் மகன் மலையரசன் ஆகியோர் அன்று இரவே அரிவாளுடன் வளர்மதி வீட்டுக்குச் சென்று, அய்யனாரைப் பார்த்து, 'உன் பொண்டாட்டி எப்படி பஞ்சாயத்துத் தலைவர் ஆகலாம்... அவளை வெட்டாமல் விட மாட்டேன்' என்று கத்திக்கொண்டு வர அங்கிருந்தவர்கள் பிடித்துள்ளனர்.

இது குறித்து ஊத்துமலை போலீஸில் அய்யனார் புகார் தெரிவிக்க, தனக்கு குடும்பம் இருப்பதாகவும், இனி இப்படி நடந்து கொள்ளமாட்டேன் எனவும் மலையரசன் மன்னிப்புக் கேட்டதால் வழக்கு பதிவு செய்யாமல் அய்யனார் மன்னித்துள்ளார்.

கடந்த 23.03.2022 அன்று ஊத்துமலை பஞ்சாயத்துத் தலைவர் வளர்மதியும், கணவர் அய்யனாரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டு மாலை ஊத்துமலைக்குய்ஜ் திரும்பியுள்ளனர்.

அங்கு நிறைகுளத்தான் (எ) கொத்தாலிகுமார் தலைமையில் ஆறு பேர்கொண்ட கும்பல் உள்ளாடையுடன் நின்றுகொண்டு, அவர்களைப் பார்த்து ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியிருக்கிறது.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

அங்கிருந்த அய்யனாரின் உறவினர்கள், இப்படிப் ஆபாசமாக பேசலாமா என்றதற்கு, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக அவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.

ஆடைகளைக் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஏழு பட்டியலினத்தவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் பரமேஸ்வரி என்பவர் படுகாயமடைந்துள்ளார். பஞ்சாயத்துத் தலைவர் வளர்மதியும், அவர் கணவர் அய்யனாரும் அந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20 நாள்களாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரமேஸ்வரி சிகிச்சை எடுத்துவருகிறார். குற்றவாளிகளில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் அரக்கோணம் அருகிலுள்ள வேடல் பஞ்சாயத்தின் தலைவரான பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த கீதாவின் கணவர் மூர்த்தியை, கடந்த 01.04.2022 அன்று ஆறு பேர்கொண்ட கும்பல், சுத்தியாலும் பெரிய கற்களாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மூர்த்தி, தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார்.

சாதி ஆதிக்கம்
சாதி ஆதிக்கம்

இதுவரை பொதுத் தொகுதியாக இருந்த வேடல் பஞ்சாயத்து 2021-ம் ஆண்டு தலித் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலில் நின்று கீதா வெற்றிபெற்றுள்ளார். துணைத் தலைவரான வெங்கடாஜலபதி காசோலையில் கையெழுத்திட மறுப்பது, கூட்டம் நடத்தவிடாமல் தடுப்பது, நாற்காலியில் உட்காரக் கூடாது என மிரட்டுவது எனப் பல்வேறு வன்கொடுமைகளை கீதாவிடம் கடைப்பிடித்துவந்துள்ளார்.

கடந்த ஜனவரி 2022 மாதம் பொங்கல்விழாவை முன்னிட்டு நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய பொருள்களை விநியோகிக்கும்போது அங்கு வந்த வெங்கடாஜலபதி, கீதாவின் கணவர் மூர்த்தியை, பலர் முன்னிலையில் சாதிரீதியாக இழிவாகப் பேசி தாக்கியிருக்கிறார்.

சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த ஹரிதாஸ் என்பவர். கீதாவின் கணவர் மூர்த்தியை சாதிரீதியாக இழிவாகப் பேசி தாக்கியிருக்கிறார்.

சமத்துவ நாள்
சமத்துவ நாள்
ட்விட்டர்

தொடர்ந்து மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் கோழிப்பண்ணை வைக்க என்ஓசி கேட்டதற்கு ஆவணங்கள் கேட்டதால், கடந்த 01.04.2022 அன்று இரவு ராஜகோபால், அருண், சிவா, சங்கர், அஜித், கிச்சான் (எ) கமலேஷ் உள்ளிட்ட கும்பல் கீதா வீட்டடுக்கு வந்து அவர் கணவர் மூர்த்தியை அசிங்கமாக பேசிக்கொண்டே இரும்பு சுத்தியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார்கள்.

கூட வந்தவர்களும் செருப்புக் காலால் மிதித்து, பெரிய கற்களைக்கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். தடுக்கச் சென்ற கீதாவையும் ஆபாசமாகப் பேசி தாக்கியிருக்கின்றனர். உயிருக்கு பயந்து ஒவ்வொரு வீடாக கீதாவும் மூர்த்தியும் சென்றுள்ளனர்.

தற்போது மூர்த்தி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சையெடுத்துவருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தலை, நெஞ்சு, முகம் என்று உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ராஜகோபால், அருண், சிவா, சங்கர் ஆகிய நான்கு பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 21 பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்தும், தீண்டாமை குறித்தும் எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

நடந்த 21 சம்பவங்களில் தேனி மாவட்டத்தில் 3-ம், மதுரை மாவட்டத்தில் 3-ம், சிவகங்கை மாவட்டத்தில் 2-ம், திருப்பூர் மாவட்டத்தில் 2-ம் திருவண்ணாமலை, கடலூர், சேலம், திருவள்ளுர், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தருமபுரி, அரியலூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்களும் நடந்துள்ளன.

பட்டியலினத்தவர்கள், பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களாக, உறுப்பினர்களாக பொறுப்புக்கு வருகிறபோது மாற்றுச் சமூகத்தினரில் சிலர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சாதிரீதியாக இத்தகைய தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இது அப்பட்டமான சாதிய வன்கொடுமை.

பட்டியலின பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புறத் தலைவர்கள், உறுப்பினர்களைப் பணி செய்யவிடாமல் குறுக்கீடு செய்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015, பிரிவு 3(1)(m)ன் கீழ் மிகப்பெரிய குற்றம்.

ஆகவே, தமிழக அரசு பட்டியலினத் தலைவர்கள் மீது சாதிரீதியாகத் தாக்குதலில் ஈடுபடுவது, அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற வன்கொடுமையில் ஈடுபடும் நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.

சாதிரீதியாக குறுக்கீடு செய்பவர்கள் துணைத் தலைவராகவோ மற்ற உறுப்பினர்களாகவோ இருக்கிறபட்சத்தில் அவர்களை பொறுப்பு நீக்கம் செய்ய வேண்டும். அச்சுறுத்தல் இருக்கக்கூடிய பட்டியலினத் தலைவர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்றார். தமிழக அரசு இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism