Published:Updated:

`கேக்கை ஆர்டர் செய்த ஆண் நண்பர்; சண்டை போட்ட சக நண்பர்!' -தாம்பரம் பெண் டெய்லருக்கு நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட யசோதா ராணி
கொலை செய்யப்பட்ட யசோதா ராணி

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் மனைவியைப் பிரிந்த தனியார் நிறுவன ஊழியர் நட்பாகப் பழகிவந்துள்ளார். அந்தப் பெண் மீதான சந்தேகத்தால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் விக்னேஷ்வர் நகரைச் சேர்ந்தவர் யசோதா ராணி (42). இவர் கணவரைப் பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். புதுபெருங்களத்தூர், பாரதிநகரில் டெய்லர் கடையை யசோதா ராணி நடத்தி வந்தார். கிழக்கு தாம்பரம், மோதிலால் நகர் வேடன் கண்ணப்பர் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (40), யசோதா ராணியுடன் நட்பாகப் பழகினார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக செல்வகுமாருடன் போனில் பேசுவதை யசோதா ராணி தவிர்த்துவந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், யசோதா ராணியைச் சந்திக்க டெய்லர் கடைக்கு வந்தார். அப்போது யசோதா ராணி போனில் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார்.

`சந்தோஷமாகத்தான் தாலி கட்டினான்... ஆனால்?' - மணமகளுக்கு நேர்ந்த கொடூரம்; விபரீத முடிவெடுத்த மணமகன்
கொலை
கொலை
மாதிரிப் படம்

`யாருடன் பேசுகிறாய்?' என்று செல்வகுமார் கேட்டுள்ளார். அதற்கு தன்னுடைய கணவருடன் பேசுவதாகக் கூறியுள்ளார். உடனே போனை பிடுங்கிய செல்வகுமார், அதில் யார் பேசுகிறார் என்று காதில் வைத்துக் கேட்டுள்ளார். அப்போது அது யசோதாவின் கணவர் குரல் இல்லை எனத் தெரிந்தது. அது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த செல்வகுமார், கத்திரிக்கோலை எடுத்து யசோதா ராணியைக் குத்தினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்த செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து யசோதா ராணியை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து யசோதா ராணியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் சகாதேவன் மேற்பார்வையில் பீர்க்கன்காரணை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது செல்வகுமார் பைக்கில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சிசிடிவி மூலம் கண்காணித்தபோது செல்வகுமாரின் பைக் பெருங்களத்தூர் ரோஜா தோட்டம் பகுதியில் அநாதையாக நின்றுகொண்டிருந்தது. இதையடுத்து போலீஸார் அந்தப்பகுதியில் செல்வகுமாரைத் தேடிய போது மேம்பாலத்தின்கீழ் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

அதிகார யுத்தம்... சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணமா?
செல்வகுமார்
செல்வகுமார்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செல்வகுமார் வேலை பார்த்துவருகிறார். இவருக்கும் தனியார் கல்லூரி பேராசிரியைக்கும் 2008-ல் திருமணம் நடந்துள்ளது. குரோம்பேட்டையில் யசோதா ராணி குடியிருந்தபோது அங்கு செல்வகுமார் வசித்துவந்துள்ளார். திருமணத்துக்கு முன்பே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு தொடர்ந்ததால் செல்வகுமாரைப் பிரிந்து அவரின் மனைவி தனியாகச் சென்றுவிட்டார். அதைப் போல யசோதா ராணியின் கணவரும் அவரைப்பிரிந்து சென்றதால் இருவரும் நெருங்கிப் பழகிவந்துள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் இருவரும் நேரில் சந்திக்க முடியவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் இருவரும் வெளியில் செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் யசோதா ராணியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததும் அவர் மீது செல்வகுமாருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால்தான் யசோதா ராணியைக் கடையில் சந்திக்க செல்வகுமார் வந்துள்ளார். அப்போது நடந்த தகராறில் யசோதா ராணியைக் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

`மனைவி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

அவரைப் பிடித்து விசாரித்தபோது, இனிமேல் நாம் இருவரும் சந்திக்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம் என்று யசோதா ராணி கூறியுள்ளார். ஏன் என்று செல்வகுமார் கேட்டதற்கு மழுப்பலான பதிலை யசோதா ராணி தெரிவித்துள்ளார். அதனால் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளது" என்றனர்.

செல்வகுமார் போலீஸாரிடம், `யசோதா ராணியின் மகளின் பிறந்தநாளுக்கு அவரின் சமீபகால ஆண் நண்பர் கேக்கை ஆர்டர் செய்துள்ளார். அதுதொடர்பாக யசோதா ராணியிடம் கேட்டதற்கு தன்னிடம் பேசாதே என்றாள். அதனால் ஆத்திரத்தில் அவளின் மூச்சை நிறுத்திவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வகுமாரை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு