Published:Updated:

லிப் கிஸ்... நிர்வாண போஸ்... சினிமா ஆசைகாட்டி பெண்களை சீரழித்த ‘இயக்குநர்!’

சினிமா
பிரீமியம் ஸ்டோரி
சினிமா

10 வருடங்களுக்கு முன்பு எடப்பாடி காவல் நிலைய எல்லையில் சொகுசு காரில் பாலியல் தொழில் செய்தபோது வேலு சத்ரியனும் அந்த புரோக்கரும் சிக்கியிருக்கிறார்கள்.

லிப் கிஸ்... நிர்வாண போஸ்... சினிமா ஆசைகாட்டி பெண்களை சீரழித்த ‘இயக்குநர்!’

10 வருடங்களுக்கு முன்பு எடப்பாடி காவல் நிலைய எல்லையில் சொகுசு காரில் பாலியல் தொழில் செய்தபோது வேலு சத்ரியனும் அந்த புரோக்கரும் சிக்கியிருக்கிறார்கள்.

Published:Updated:
சினிமா
பிரீமியம் ஸ்டோரி
சினிமா

சினிமா ஆசைகாட்டி கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள் பலரைச் சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த இயக்குநர் மீது குவியும் புகார்களைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

சேலம் மாவட்டம், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி இரும்பாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரே, இந்தப் பாலியல் மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. அந்தப் புகாரில், “சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த எனக்கு ஃபேஸ்புக் மூலம் ‘நோபல் கிரியேஷன்ஸ்’ என்ற சினிமா கம்பெனி அறிமுகமானது. அவர்கள் சொன்னபடி, சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா, ஆபீஸர்ஸ் காலனி அருகே செயல்பட்ட அந்த கம்பெனிக்குப் போனேன். அங்கிருந்த இயக்குநர் வேலு சத்ரியன், ‘நோ’ என்ற புதிய படத்தை எடுக்கவிருப்பதாகவும் அதில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகவும் சொன்னார்.

வேலு சத்ரியன்
வேலு சத்ரியன்

படத்தில் நடிக்க என்னிடம் பணம் கேட்டார். இல்லை என்றதால் அலுவலகத்தில் வேலையில் சேரச் சொன்னார். வேலைக்குச் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை. படத்தை எடுப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் இருந்ததால், ‘சார்... எப்ப படம் எடுப்பீங்க?’ என்று அவரிடம் கேட்டேன். ‘ஒரு மேட்டர் படம் எடுக்கிறேன்... அதில் நடிக்கிறியா?’ என்றார். மறுத்ததால், என் செல்போனைப் பறித்துக்கொண்டு விரட்டிவிட்டார். சினிமா வாய்ப்பு கேட்டுவரும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அதைக் காட்டி மிரட்டிப் பணம் பறிப்பதோடு, பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார் வேலு” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளிவரத் தொடங்கின.

லிப் கிஸ்... நிர்வாண போஸ்... சினிமா ஆசைகாட்டி பெண்களை சீரழித்த ‘இயக்குநர்!’

விசாரணை நடத்திய போலீஸாரிடம் பேசியபோது, “கடந்த 13 வருடங்களாக சினிமா இயக்குநர் என்ற பெயரில் வேலு சத்ரியன் பல பெண்களைச் சீரழித்திருக்கிறார். சேலத்திலுள்ள முக்கியமான பாலியல் தொழில் புரோக்கருக்கு பார்ட்னராவும் இருந்திருக்கிறார். சினிமா வாய்ப்பு தேடிவரும் இளம்பெண்களை அந்த புரோக்கர் மூலம் பாலியலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதித்திருக்கிறார்.

10 வருடங்களுக்கு முன்பு எடப்பாடி காவல் நிலைய எல்லையில் சொகுசு காரில் பாலியல் தொழில் செய்தபோது வேலு சத்ரியனும் அந்த புரோக்கரும் சிக்கியிருக்கிறார்கள். ஆனால், பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பியிருக்கிறார். அதன் பிறகு நேரடியாக இல்லாமல் அந்த புரோக்கர் மூலமாகவே தொழில் செய்திருக்கிறார். வாய்ப்பு தேடிவரும் ஏழைப் பெண்கள், கல்லூரி மாணவிகளே இவரது டார்கெட்.

லிப் கிஸ்... நிர்வாண போஸ்... சினிமா ஆசைகாட்டி பெண்களை சீரழித்த ‘இயக்குநர்!’

அவரது அலுவலகத்தில் சோதனையிட்டபோது குவியல் குவியலாக ஆணுறை பாக்கெட்டுகள் கிடைத்தன. 13 ஹார்டு டிஸ்க்குகள், மூன்று லேப்டாப்கள், இரண்டு கணினி, மெமரி கார்டுகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அவற்றில் 500-க்கும் அதிகமான பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் இருந்தன. ஹார்டு டிஸ்குகளிலிருந்த 300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களைக் கைப்பற்றினோம்” என்றார்கள்.

தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள், “இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து சினிமா ஆசையைத் தூண்டுவதே வேலுவின் டெக்னிக். தன்னை இயக்குநர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘உங்க கண் அழகாக இருக்கு... நீங்க மட்டும் நடிக்க வந்தால் பெரிய நடிகையாகிடலாம்’ என்று கமென்ட் போடுவார். அதை நாம் ரசித்தால், உடனே செல்போன் நம்பரைக் கேட்பார். பிறகு வாட்ஸ்அப்பில் தொடர்ந்து மெசேஜ் அனுப்புவார். அவரை நம்பிவிட்டோம் என்பதைப் புரிந்துகொண்டதும் அலுவலகத்துக்கு வரச் சொல்வார். யாரும் அவரை ‘அண்ணா’ என்று கூப்பிட்டால் பிடிக்காது. அப்படிக் கூப்பிட்டால் ஃபிரெண்ட்லியா இருக்க முடியாது என்று சொல்வார்.

லிப் கிஸ்... நிர்வாண போஸ்... சினிமா ஆசைகாட்டி பெண்களை சீரழித்த ‘இயக்குநர்!’

நேரில் சந்திப்பவர்களிடம், ‘பெரிய இயக்குநர்கள் பலருக்கும் நான்தான் கதை தயாரித்துக் கொடுக்கிறேன். என்னிடம் உதவியாளர்களாக இருந்த பலர் இப்போது சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக இருக்கிறார்கள். நான் தேர்வு செய்து அனுப்பியவர்கள்தான் முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள்’ என்று சில இயக்குநர்கள், நடிகைகளின் பெயர்களைச் சொல்லி நம்பிக்கை வரவைப்பார்.

‘சினிமாவுக்கு வந்துட்டா கூச்சப்படக் கூடாது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கச் சம்மதிக்கணும். நீங்க கூச்சப்படுவீங்களா?’ என்று கேட்பார். எங்கே வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று ‘கூச்சப்பட மாட்டேன்’ என்று சொன்னதும், கட்டிப்பிடித்து, ‘லிப் கிஸ்’ கொடுக்கச் சொல்வார். அதையெல்லாம் அவரது உதவியாளர் ஜெயஜோதி வீடியோ எடுப்பார்.

ஒரு வாரம் கழித்து, ‘ஒரு கதாபாத்திரம் இருக்கு. உங்களுக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கும்... அதான் உங்களை மட்டும் கூப்பிட்டேன்’ என்று சொல்வார். அடுத்து, ‘அமலா பால் மாதிரி ஆடையில்லாம நடிக்கணும். படத்துல உங்க ரோல் ரொம்ப முக்கியமா இருக்கும்’ என்பார். சம்மதிக்க வைத்து, ரிகர்சல் பார்ப்பதாக ஆடையில்லாமல் புகைப்படம், வீடியோ எடுப்பார்.

மாடசாமி
மாடசாமி

பிறகு, `திரைப்படம் எடுக்கப் பணம் வேண்டும்’ என்று மிரட்டுவார். தர முடியாதவர்களை புரோக்கர் மூலம் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துவார். `இதெல்லாம் தப்பில்லை... நிறைய நடிகைகள் இப்படித்தான் பெரிய ஆளா ஆனாங்க’ என்று நிர்பந்திப்பார். குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகள் எனச் சுமார் 300 பேர் அவரால் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள்” என்று வருத்தப்பட்டார்கள்.

இந்தப் புகார் தொடர்பாக சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமியிடம் கேட்டபோது, “வேலு சத்ரியன், அவரின் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அங்கு கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்று முடித்துக்கொண்டார்.

என்னத்தைச் சொல்றது?!