Published:Updated:

துப்புரவுத் தொழிலாளிக்குப் பாலியல் தொந்தரவு... கோவையில் மருத்துவமனை ஊழியர் கைது!

ஜோதி
ஜோதி

துப்புரவுத் தொழிலாளிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த ஜோதி என்பவரைக் கைது செய்தது கோவைக் காவல்துறை.

கோவை வரதராஜபுரத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்தப் பணியில் ஏராளமான ஆண் மற்றும் பெண் துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெண் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பெண்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சென்றுள்ளார்.

பாலியல் தொந்தரவு
பாலியல் தொந்தரவு

அப்போது, அந்தப் பெண்ணை, அதே மருத்துவமனையில் பணியாற்றும் ஜோதி என்பவர் பின்தொடர்ந்துள்ளார். அத்துமீறி பெண்கள் கழிப்பறைக்குள்ளும் அவர் நுழைந்துள்ளார்.

இதையடுத்து, அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஜோதி அந்தப் பெண்ணைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

கைது
கைது

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஜோதியின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் (பிரிவு 75) மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் 506 கொலை முயற்சி, 323 கொடும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜோதி, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஜோதி
ஜோதி

மேலும், அவர் பி.ஜே.பி-யின் கோவை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவின் பொறுப்பாளராக இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு