Published:Updated:

கோவை: `தகாத வார்த்தை முதல் கொலை வரை'; இளைஞர்களிடம் வேகமாகப் பரவும் போதை ஊசி கலாசாரம்!

போதை
போதை ( prasanna venkatesh.b )

கோவை இளைஞர்களிடம் போதை ஊசி பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்துவருகிறது.

கோவை சுற்றுவட்டாரங்களில் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களிடம் போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கம் அதிகரித்துவருகிறது. முக்கியமாக, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. மருந்தகங்கள், மருந்து நிறுவனங்களிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, அதில் 'டிஸ்டில்டு' வாட்டரைக் கலந்து ஊசியாகச் செலுத்திக்கொள்கின்றனர்.

போதை ஊசி
போதை ஊசி
கோவை: வலி நிவாரண மாத்திரையில் போதை ஊசி! - இளைஞர்கள் கைது

இந்த கலாசாரம் கோவை இளைஞர்களிடம் மிக வேகமாகப் பரவிவருகிறது. பலர் இதன் ஆபத்தை உணராமல் போதைக்கு அடிமையாகிவருகின்றனர்.

சில நாள்களுக்கு முன்பு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்திக்கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதில் சில இளைஞர்கள் அமர்ந்து போதை ஊசியைத் தயாரித்துச் செலுத்திக்கொள்ளும் அதிர்ச்சிக் காட்சிகள் இருந்தன. அப்போது இளைஞர்கள் தகாத வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தனர்.

போதை ஊசி
போதை ஊசி

அதேபோல, கடந்த மாதம் மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த போதை ஊசிக்கு அடிமையாகியிருந்த ஜீவானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார். போதை ஊசிக்கு ஏற்பட்ட தகராறில் அவரின் நண்பன் மணிகண்டன் ஜீவானந்தத்தை வெட்டிக் கொலை செய்தார். சாய்பாபா காலனி, உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகள் போதை ஊசி ஹப்பாக விளங்கிவருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை ஊசி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதை விற்பனை பூதாகரமாகிவருவதால், அதற்காக நான்கு தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். மருத்துவர்களின் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்கக் கூடாது என மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு