Published:Updated:

`நான் தலைமறைவு ஆகவில்லை!’ - 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு; கைதாகிறாரா `சிறுமுகை' காரப்பன்?

இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்திருந்த சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் காரப்பன் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் கோவை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரப்பன்
காரப்பன்

கோவை மாவட்டம், சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனரும் தேசிய கைத்தறி பயிற்சியாளருமான காரப்பன், கடந்த மாதம் 29-ம் தேதி `திராவிடம் 100' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் இந்துக் கடவுள்களை அவர் விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, கடந்த 19-ம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், காரப்பன் மீது பீளமேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

காரப்பன்
காரப்பன்

மேலும், காரப்பனைக் கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 21-ம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.

``ஆயிரங்களிலிருந்து லட்சத்துக்கு விற்பனை... மோடி செய்த நல்லவை..!"  - `காரப்பன் சில்க்ஸ்' காரப்பன்

தனது கருத்துக்காக காரப்பன் மன்னிப்பு கேட்டிருந்தார். இருப்பினும், காரப்பன் மீது பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத உணர்வைத் தூண்டுதல் (505(1)(b)), குறிப்பிட்ட மதம் குறித்து இழிவாகப் பேசுதல் (295(a)) ஆகிய இரு பிரிவுகளின்கீழ் பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரப்பன்
காரப்பன்

இவை இரண்டும் பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளாகும். அதனால், விரைவில் காரப்பன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய காரப்பன், “ நான் தலைமறைவு எல்லாம் ஆகவில்லை. தற்போதுவரை போலீஸிடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. போலீஸார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்றார் இயல்பாக.