Published:Updated:

`செல்லாத நோட்டுகளால் சிக்கிய ஆனந்தன்!’- கோவை தி.மு.க பிரமுகரின் வில்லங்கப் பின்னணி

கோவையில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர் குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்தன்
ஆனந்தன்

திருப்பூர் அவிநாசி தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோவின் மகன் ஆனந்தன். கோவை சொக்கம் புதூர் பகுதியில் குடியிருக்கும் இவர், தி.மு.க-வின் அன்னூர் ஒன்றியச் செயலாளராக இருந்துவருகிறார்.

திமுக ஆனந்தன்
திமுக ஆனந்தன்

இந்நிலையில், கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு, வடவள்ளியில் தன் பெயரில் ஒரு வீடு வாங்கி, அதை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சேக் மற்றும் ரசீத் என்பவருக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளார்.

இதனிடையே, வடவள்ளி போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில், மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பணம்
பணம்

ரூ.2,68,000 மதிப்பிலான பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 667 காகித ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அதாவது மேலடுக்கில் மட்டும் பணத்தை வைத்துவிட்டு, அதற்குக் கீழ் காகித பண்டல்களை வைத்துள்ளனர்.

`கோவை தி.மு.க பிரமுகர் வீட்டில் நடந்த சோதனை!’ - கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

``தங்களிடம் முதலீடு செய்தால், அதை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறுவார்கள். மேலும், குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாக சொல்லி பிராசஸிங் கட்டணமாக லட்சக்கணக்கில் பணம் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

பணம்
பணம்

அதேபோல, பழைய மதிப்பிழக்கப்பட்ட கரன்சிகளை மாற்றித்தர கமிஷன் பெற்று மோசடி செய்திருப்பதாகவும் புகார் வந்தது. இதற்காக, ஆனந்தன் தனக்குச் சொந்தமான வீட்டில் வள்ளல் நகர் ஷேக், பெரோஷ் மற்றும் நிலம்பூர் ரஷீத் ஆகியோர்களைக் கொண்டு இந்த மோசடியை செய்து வந்துள்ளார்.

அங்கிருந்த பணம் எண்ணும் இயந்திரங்கள் மற்றும் கரன்சி கட்டுகளை பின் அடிக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவுசெய்து, நான்கு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

 திமுக ஆனந்தன்
திமுக ஆனந்தன்

ஆனந்தனால் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் காவல்துறைக்குப் புகாரளிக்கலாம்” என்று வடவள்ளி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி எம்.பி.ராசாவுக்கு மிகவும் நெருக்கமானவராக சொல்லப்படும் ஆனந்தன், கடந்த சட்டசபை தேர்தலில் அவிநாசி தொகுதி தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டார். வடவள்ளியில் உள்ள அந்த வீட்டை சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புக்கும் விட்டுள்ளார்.

ஆனந்தன்
ஆனந்தன்
File Photo

ஓணாப்பாளையத்தில், க்ரீம் ஹோம் எனப்படும் பங்களா ரிசார்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த ஆனந்தன், ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.