Published:Updated:

பள்ளி மாணவிகளிடம் ஆபாசப் படம் காட்டிய கோவை பள்ளி தாளாளர்! - போக்ஸோவில் கைது

கோவையில், மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காண்பித்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரிய ஆண்டனி
மரிய ஆண்டனி

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ஐந்தாவது வீதியில் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.

பள்ளி
பள்ளி

மரிய ஆண்டனி என்ற பாதிரியார்தான் இந்தப் பள்ளியின் தாளாளர். இந்த நிலையில், இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வதாக புகார் எழுந்தது.

`போக்ஸோ சட்டத்தில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்!’- கரூர் சிறுமி பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி

குறிப்பாக, பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம் யூடியூபில் ஆபாசப் படம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

பள்ளி
பள்ளி

இதைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தாளாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ரத்தினபுரி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் பெண் ஆய்வாளர்கள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

மரிய ஆண்டனி
மரிய ஆண்டனி

இதில் மரிய ஆண்டனியை, கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மரிய ஆண்டனி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.