Published:Updated:

கோவை மாணவி தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்ட மற்ற இருவர் யார்?! - என்ன சொல்கிறது போலீஸ்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

கோவை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது

கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவது அவர் எழுதிவைத்த கடிதம்தான். அந்தக் கடிதத்தில், ``யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா. எலிசா சாருவோட அப்பா. இந்த சார் ***** (கெட்ட வார்த்தை). யாரையும் விடக் கூடாது” என்று முடிகிறது.

கடிதம்
கடிதம்
`பழிபோட்ட ஆசிரியர்... கண்டு கொள்ளாத பள்ளி?!’ - கோவை மாணவி தற்கொலையின் அதிர்ச்சிப் பின்னணி

வேறு கூடுதல் தகவல் எதுவும் கடிதத்தில் இல்லை. அந்த கடிதத்தில் மூன்றாவதாக குறிப்பிட்டிருப்பது, மாணவி படித்து வந்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்று தகவல் வெளியானது.

மிதுன் சக்கரவர்த்திமீது மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் மிதுன் – மாணவி வாட்ஸ்அப் உரையாடலும் வெளியாகியிருந்தது. அதில் மாணவிக்கு மிதுன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்திமீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைதுசெய்தனர். ஆனால், கடித்திலுள்ள மற்ற இரண்டு பேர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர், உறவினர், நண்பர்களிடம் விசாரித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் வாடகை வீடுதான். பல வீடுகள் மாறிவிட்டோம். அதனால், எங்களுக்கு அதில் இருக்கும் பெயர்கள் தெரியவில்லை” என்கின்றனர் பெற்றோர். மற்ற இரண்டு சம்பவங்கள் மாணவி 6-ம் வகுப்பு படிக்கும்போது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது அவர் தோழிகளின் தந்தை, தாத்தவாக இருக்கலாம் என்கின்றனர் உறவினர்கள்.

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி

``இருப்பினும், மிதுன் சக்கரவர்த்திதான் உடல்ரீதியாக, நேரடியாக வன்கொடுமை செய்திருக்கிறார். அதனால்தான் மிதுன் சக்கரவர்த்திமீது அவர் அதிக கோபத்துடன் இருந்தார்.

அந்தச் சம்பவத்துக்கு பிறகு அவருக்கு ஆண்களைப் பார்த்தாலே அருவருப்பாகிவிட்டது. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். ஒருமுறை கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். எனவே, இந்தச் சம்பவத்துக்கு பிறகு சிறு வயதில் நடந்த சம்பவங்களையும் மனதில் யோசித்து பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால், அவர்கள் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்” என்று நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால், சில உறவினர்களும் நண்பர்களும் அந்தக் கடிதத்தை மாணவி எழுதியிருக்க வாய்ப்பு குறைவு என்றும் சொல்கின்றனர்.

அதில் கெட்டவார்த்தை இடம் பெற்றிருப்பதால் மாணவி அதை எழுதியிருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறுகின்றனர். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலும்கூட மாணவியின் அந்தக் கடிதத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

இதனால், காவல்துறை அந்த இருவரைக் காப்பாற்ற முயல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, ``அந்தக் கடிதத்தை எழுதியது மாணவிதானா என்பது உறுதியாகவில்லை.

மாணவியின் பெயர் அதில் இல்லை. அது அவரின் கையெழுத்துதானா என்று விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் கடிதத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர்கூட நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. மாணவியின் பெற்றோர் மிதுன் சக்கரவர்த்தி மீது புகார் கொடுத்தனர். விசாரணையில் மிதுன் சக்கரவர்த்தி மீதான புகாருக்கு ஆதாரங்கள் கிடைத்தன.

மிதுன் சக்கரவர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி

அது போன்ற ஆதாரங்கள் மற்ற இரண்டு பேர் குறித்து கிடைக்கவில்லை. அவர்கள் யார் என்பது குறித்தும் நாங்கள் விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

மாணவி புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரிடம்கூட விஷயத்தை மறைத்த சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்

இந்த நிலையில், கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸார், ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு