Published:Updated:

பெட்ரோல் குண்டு டு கட்டப் பஞ்சாயத்து - கோவை வி.ஹெச்.பி மாவட்டச் செயலாளரின் வில்லங்கப் பின்னணி

சரவணன்
News
சரவணன்

கோவை, காரமடை அருகே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சரவணன் குறித்த பின்னணி.

கடந்த ஜூன் 25-ம் தேதி, கோவை மாவட்டம் காரமடை அருகே, கெம்பனூர் கிராமத்தில் அனிதா என்ற பள்ளி ஆசிரியரின் வீட்டுக்குள் நான்கு பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அந்தக் கும்பல் அனிதாவை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, தங்கத் தாலி, தங்க வளையல், தங்கக் கம்மல் உட்பட 9 1/4 சவரன் நகைகளை பறித்துச் சென்றது. இது தொடர்பாக அனிதா போலீஸில் புகாரளித்திருந்தார்.

கோவை வி.ஹெச்.பி
கோவை வி.ஹெச்.பி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விசாரணையில், அனிதாவின் கணவர் சந்திரசேகருக்கும் சந்திரசேகரின் சகோதரர் நட்ராஜுக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்துவந்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்கிற சரவணக்குமார் என்ற கட்டப்பஞ்சாயத்து கும்பலை நாகராஜ் அணுகியுள்ளார்.

இது தொடர்பாக, சரவணன் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், காரமடை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பல்சர் வாகனத்தைச் சோதனை செய்ததில் அது திருட்டு வாகனம் என்பதை உறுதி செய்தனர். அந்த வாகனத்தில் வந்த சரவணன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது, அனிதா வீட்டுக்குள் புகுந்து, மிரட்டி, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கைது
கைது
Representational Image

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் சிறுமுகைப் பகுதியில் முஸ்தா என்பவரின் ஃபர்னிச்சர் குடோன் உடைக்கப்பட்டு, பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. முஸ்தா மற்றும் அவரின் மனைவி கதீஜாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கதீஜா, சரவணனை அணுகியுள்ளார். அப்படித்தான் முஸ்தாவின் ஃபர்னிச்சர் குடோனை சரவணன் உடைத்து காலி செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரண்டு வழக்குகளிலும் சரவணன்தான் முக்கியக் குற்றவாளி. விஷ்வ ஹிந்து பரிஷத், கோவை வடக்கு மாவட்டச் செயலாளரான சரவணன், மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு கோவை சி.பி.எம் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், சரவணன் லண்டனில் உயர்கல்வி பயின்று திரும்பியவர்.

கோவை சி.பி.எம் பெட்ரோல் குண்டு
கோவை சி.பி.எம் பெட்ரோல் குண்டு

இதையடுத்து, இந்த இரண்டு வழக்குகளிலும் சரவணன், ஆறுமுகம், ரவி, ஆனந்தராஜ், பிரேம்குமார், மூர்த்தி, சின்ன சரவணன், நாகராஜ் ஆகிய எட்டுப் பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் சரவணன் உள்ளிட்ட சிலர் வி.ஹெச்.பி-யைச் சேர்ந்தவர்கள் என்பதும், சிலர் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை என்றும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.