Published:Updated:

கோவை: வலி நிவாரண மாத்திரையில் போதை ஊசி! - இளைஞர்கள் கைது

போதை ஊசி
போதை ஊசி

கோவை தடாகம் சாலை அருகே வலி நிவாரண மாத்திரையை போதை ஊசிப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. முக்கியமாக, மருந்து மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தும் கலாசாரம் வெகுவாக அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், கோவையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால், ஊரடங்குக் கட்டுப்பாடுகளும் கடுமையாக உள்ளன.

போதை மருந்து
போதை மருந்து
சென்னை: பெட்ரோல் விலை உயர்வு; லிஃப்ட் கொடுத்ததற்கு பணம்! -போதை மாணவனால் மேஸ்திரிக்கு நேர்ந்த கொடூரம்

முக்கியமாக, டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

இந்தநிலையில், தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் சாலையோரமாக நின்றிருந்த ஒரு காரில் சோதனை செய்தனர். அந்த காரில் வலி நிவாரணத்துக்காக உட்கொள்ளக்கூடிய மாத்திரைகள் அதிகள அவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விற்பனைக்கு வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகள்
விற்பனைக்கு வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகள்

ஆனால், அதற்கான மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்தக் குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரையை ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தினால் போதை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். ஜானகிராமன், பார்த்திபன், கபிலேஷ், முகமது அப்சல் ஆகிய நான்கு பேர் இந்த மாத்திரையை போதைப் பயன்பாட்டுக்கு விற்றது தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

அவர்களிடமிருந்து 650 மாத்திரைகள், ரூ.11,500 ரொக்கம் மற்றும் போதை மாத்திரை விற்பனைக்குப் பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மாத்திரையைச் சட்டவிரோதமாக விற்ற நான்கு பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு