Published:Updated:

``சாகும் வரை சிறையிலிருக்க வேண்டும்!" - மகள், உறவுக்கார சிறுமி வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

சிறுமி வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

மகள், உறவுக்காரச் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை சாகும் வரை சிறையிலடைக்க வேண்டுமென உத்தரவிட்டு, இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.

``சாகும் வரை சிறையிலிருக்க வேண்டும்!" - மகள், உறவுக்கார சிறுமி வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

மகள், உறவுக்காரச் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை சாகும் வரை சிறையிலடைக்க வேண்டுமென உத்தரவிட்டு, இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.

Published:Updated:
சிறுமி வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஆரணிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 36 வயதாகும் இந்த நபர், தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்தார். இவரின் மனைவி 13.12.2018 அன்று ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ``எனக்கு நான்கு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் 13 வயது நிரம்பிய மூத்த மகளை என் கணவரே மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார். 2015-லிருந்து, மூன்று ஆண்டுகளாக மகள் என்றும் பார்க்காமல், அவர் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார். மகளிடம் மட்டுமின்றி, எங்களோடு தங்கியிருக்கும் என் சித்தியின் மகளான 12 வயது சிறுமியையும் அவர் வன்கொடுமை செய்திருக்கிறார். வெளியில் சொன்னால் கொலைசெய்துவிடுவதாக இருவரையும் மிரட்டிவந்திருக்கிறார். எனவே, என் கணவரை உடனடியாகக் கைதுசெய்து, அவரிடமிருந்து எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ எனப் புகார் மனுவில் கூறியிருந்தார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

இதையடுத்து, ‘போக்சோ’ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், கொடூர குணம்கொண்ட வெங்கடேசனைக் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையிலடைத்தனர். அவர் பிணையில் வெளிவந்தால், குடும்பத்தினருக்கு ஆபத்து எனக் கருதி, இதுவரை ஜாமீன் வழங்கப்படவே இல்லை. இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ``சொந்த மகளிடமும், உறவுக்காரச் சிறுமியிடமும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வெங்கடேசன் சாகும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக கடுங்காவல் தண்டனையும் வழங்குகிறேன்’’ என நீதிபதி பரபரப்புத் தீர்ப்பை வாசித்தார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த வெங்கடேசன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நீதிமன்ற தீர்ப்பின் நகலும் வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!