Published:Updated:

ம.பி: பட்டியலினத்தவர் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு! - மூவரைக் கைது செய்தது போலீஸ்

முதியவரின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு ( ட்விட்டர் )

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் உயிரிழந்த முதியவரின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம் சந்திபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா அகிர்வார் (70). வயது மூப்பின் காரணமாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து கண்ணையாவின் உறவினர்கள் அவர் உடலை தகனம் செய்வதற்காக, அவரது கிராமத்தில் இருந்த சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த கிராமத்தில் இருந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கண்ணையாவின் உடலை அந்த சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து கண்ணையாவின் இறுதிச் சடங்குகளை தகன மேடைக்கு அருகிலிருந்த இடத்தில் அவர் உறவினர்கள் செய்திருக்கின்றனர்.

முதியவரின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு
முதியவரின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு
ட்விட்டர்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீஸார் உடலை தகனம் செய்யவிடாமல் தடுத்த, நாராயண் சிங் மீனா, ராம்பரோஸ் மீனா, திலீப் மீனா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

மேலும் அவர்கள் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism