Published:Updated:

ம.பி: பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின சிறுமி; ஏழு பேரைக் கைதுசெய்த போலீஸ்!

பள்ளி ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது தொடர்பாக ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

ம.பி: பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின சிறுமி; ஏழு பேரைக் கைதுசெய்த போலீஸ்!

மத்தியப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது தொடர்பாக ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:
பள்ளி ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பவாலியாகேடியில் 16 வயது சிறுமியைப் பள்ளிக்குச் செல்லவிடாமல் கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சிறுமி பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த சனிக்கிழமை (ஜூலை 23-ம்) இந்த சிறுமி தனது கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, உள்ளூர்வாசிகள் சிலர் அந்த சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் அந்த சிறுமியின் புத்தகப் பையை பறித்துக்கொண்டனர். மேலும், ``இந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற சிறுமிகள் யாரும் பள்ளிக்கூடம் செல்லவில்லை... அதனால நீயும் செல்லக்கூடாது!" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பள்ளி
பள்ளி
ட்விட்டர்

இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்த சிறுமி தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் சகோதரர், குடும்பத்தினர் இது குறித்து, உள்ளூர்வாசிகளிடம் தட்டிக்கேட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

அப்போது, அந்த உள்ளூர்வாசிகள் சிறுமியின் சகோதரன் மற்றும் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.

பின்னர் திங்கள்கிழமை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட ஏழு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.