Published:Updated:

சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்த பட்டியலின சிறுமி; அடித்து வெளியேற்றிய நபர் - உபி-யில் அதிர்ச்சி

சிறுமிமீது தாக்குதல் ( சித்திரிப்புப் படம் )

பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்த பட்டியலினச் சிறுமியை சாதிப் பெயரைக் குறிப்பிட்டு திட்டி, அடித்து வெளியேற்றிய நபர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி சீருடை அணியாதது குறித்து முன்னாள் கிராம தலைவர் மனோஜ் குமார் துபே என்பவர் விசாரித்திருக்கிறார். அதற்கு அந்த மாணவி தன் தந்தை பள்ளி சீருடை வாங்கி தரும் போது அணிந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு கோபமடைந்த மனோஜ் குமார் துபே, அந்த மாணவியை சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அடித்து திட்டியிருக்கிறார். மேலும், அவர் அந்த சிறுமியைப் பள்ளியைவிட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமி பட்டிலியலினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்
தாக்குதல்
சித்திரிப்புப் படம்

குற்றம்சாட்டப்பட்ட இந்த நபர் அதிகாரியோ, ஆசிரியரோ கிடையாது. முன்னாள் கிராமத் தலைவர்தான். அவர் தினமும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதை விசாரித்த காவல் அதிகாரிகள் அந்த நபர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.