Published:Updated:

நீலகிரி: பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணை மேல் பறந்த ட்ரோன் கேமிரா; இளைஞர்களால் பரபரப்பு!

ட்ரோன் கேமிரா இயக்கிய இளைஞர்கள்

ட்ரோன் கேமிராக்கள் எனப்படும் பறக்கும் படப்பிடிப்பு கருவிகளை நீலகிரியில் அனுமதியின்றி இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையையும் மீறி பல பகுதிகளில் இந்த வகை கேமிராக்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

நீலகிரி: பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணை மேல் பறந்த ட்ரோன் கேமிரா; இளைஞர்களால் பரபரப்பு!

ட்ரோன் கேமிராக்கள் எனப்படும் பறக்கும் படப்பிடிப்பு கருவிகளை நீலகிரியில் அனுமதியின்றி இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையையும் மீறி பல பகுதிகளில் இந்த வகை கேமிராக்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

Published:Updated:
ட்ரோன் கேமிரா இயக்கிய இளைஞர்கள்

பல்லுயிர் பெருக்க உயிர்ச்சூல் மண்டலமான நிலகிரியில் அதிக அளவிலான வனப் பரப்பும் வனவிலங்குகளும் உள்ளன. இது மட்டுமல்லாது பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக தேசிய பூங்காக்கள், நீர் மின் உற்பத்தி நிலையங்கள், அணைக்கட்டுகள், ராணுவப் பயிற்சி மையங்கள், ஆளுநர் மாளிகை போன்றவையும் உள்ளன. இவற்றின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.

ட்ரோன் கேமிரா இயக்கிய இளைஞர்கள்
ட்ரோன் கேமிரா இயக்கிய இளைஞர்கள்

குறிப்பாக, ட்ரோன் கேமிராக்கள் எனப்படும் பறக்கும் படப்பிடிப்பு கருவிகளை நீலகிரியில் அனுமதியின்றி இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையையும் மீறி பல பகுதிகளில் இந்த வகை கேமிராக்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காட்டேரி அணைப்பகுதியில் இளைஞர்கள் சிலர் ரகசியமாக ட்ரோன் கேமிராக்களை பறக்கவிட்டு வீடியோ பதிவு செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது காட்டேரி அணை. ஆங்கிலேயர் காலத்தில் நீர் மின் உற்பத்திக்காக கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து தற்போது அருவங்காட்டில் இயங்கிவரும் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலைக்கு குழாய்கள் மூலம் நீர் கொண்டு செல்லப்படுகிறது. மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் மக்கள் நடமாடவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர் காட்டேரி அணை மற்றும் அருவி பகுதிகளில் தடையை மீறி ட்ரோன் கேமிராவை பறக்க விட்டு‌ வீடியோ எடுத்துச் சென்றுள்ளனர்.

ட்ரோன் கேமிரா இயக்கிய இளைஞர்கள்
ட்ரோன் கேமிரா இயக்கிய இளைஞர்கள்

சம்பந்தப்பட்டத் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் முறையிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய ஊட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜனார்த்தனன், ``பாதுகாக்கப்பட்ட பகுதிகளை பறக்கும் கேமிராக்கள் மூலம் வீடியோ போட்டோ போன்றவற்றை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம் அந்த பகுதிகளின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. சம்பந்தப்பட்டத் துறைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism