Published:Updated:

`87 விவசாயிகள்; ரூ.70 கோடி; 15.73 கோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ்!' - ஆந்திராவை அதிரவைத்த மோசடி

Representational Image
Representational Image

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 87 விவசாயிகள் பெயரில் முறைகேடாக ரூ.69.46 கோடி அளவுக்கு வங்கிக் கடன் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியில் முறைகேடாக கடன்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை
Facebook

தொழிலதிபர் பப்பு சிங் என்பவர் ஒருவர் மட்டுமே கோடிக்கணக்கில் விவசாயக் கடன் பெற்று மோசடி செய்திருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர் விசாரணையில் பப்பு சிங், 87 விவசாயிகள் பெயரில் ரூ.69.46 கோடி அளவுக்குக் கடன் வாங்கியிருப்பது தெரியவந்தது.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இருந்து பப்பு சிங்கின் கணக்குக்கு பணம் மாற்றப்பட்டு, அதை சொந்தத் தொழில் முதலீடாக அவர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை, மீன் வளர்ப்புத் தொட்டிகள் உள்ளிட்ட ரூ.51 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது.

`ரூ.20 லட்சம் கடன் தர்றோம்; ரூ.85,000 முன்பணம்! - நீலகிரியை அதிரவைத்த பொள்ளாச்சிப் பெண்ணின் மோசடி

இதில் ரூ.35.70 கோடி மதிப்பிலான காலி மனைகள், மீன் தொட்டிகள், கோழிப்பண்ணை உள்ளிட்டவைகளும் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருப்பு வைத்திருந்த பணம் ரூ.15.73 கோடியும் அடங்கும் என அமலாக்கத் துறை தெரிவித்திருக்கிறது. இந்த மோசடி ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு