Published:Updated:

`மின்வேலியில் சிக்கி சுருண்டுவிழுந்த காட்டுயானை!’ - குடியாத்தம் வனப்பகுதியில் `தந்தம்’ வேட்டை?

உயிரிழந்த காட்டு யானை
உயிரிழந்த காட்டு யானை

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காவலேரி குட்டை வனப்பகுதியில், இன்று காலை சிலர் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றனர்.

காட்டு யானை
காட்டு யானை

அப்போது, வனப்பகுதிக்கு அருகில் இரண்டு நீளமான தந்தங்களுடைய பெரிய ஆண் யானை உயிரிழந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தந்தம், தோல், ரோமம், நகம்... எல்லாமே கோடிகள்! - யானைக் கடத்தல் பயங்கரம் #ExtricateElephants

உடனே காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தமிழக-ஆந்திர மாநில எல்லையோர வனப்பகுதி என்பதால், இரு மாநில வனத்துறையினரும் அங்கு வந்தனர்.

உயிரிழந்த காட்டு யானை
உயிரிழந்த காட்டு யானை

சம்பவம் நிகழ்ந்த இடம், சில மீட்டர் தமிழக எல்லைக்குள் இருந்ததால் ஆந்திர வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அதையடுத்து, யானையின் உடல் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

``உயிரிழந்த யானைக்கு சுமார் 30 வயது இருக்கும். வனப்பகுதியையொட்டி மர்ம நபர்கள் சிலர் மின்வேலியை அமைத்து மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

காட்டு யானை
காட்டு யானை

அப்படி வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கித்தான் யானை உயிரிழந்திருக்கிறது. தந்தங்களை வெட்டிக் கடத்துவதற்காக யானைகளைக் குறிவைத்து மின்வேலி அமைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்" என்கின்றனர் வனத்துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு