Published:Updated:

போதையில் சிக்கிய கூட்டாளி; விடுவிக்க வந்த போலி பெண் எஸ்ஐ! - சிதம்பரம் டிஎஸ்பி கிடுக்கிப்பிடி

சிதம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் உடையில் பலரை ஏமாற்றிய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி சப்-இன்ஸ்பெக்டர்
போலி சப்-இன்ஸ்பெக்டர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிதம்பரம் மந்தகரை காமாட்சிம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் சக்கரபாணி என்பவர், குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீஸார் சக்கரபாணியைக் கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

police
police
`கையில் வாக்கி டாக்கி, சப்-இன்ஸ்பெக்டர் சீருடை, வசூல் வேட்டை!' - பதறவைத்த போலி எஸ்.ஐ

இந்நிலையில், இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் உடையில் காவல் நிலையம் வந்த பெண் ஒருவர், கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருவதாகவும் கூறி சக்கரபாணியை விடுக்கக் கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணை சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர். அவர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் போலி சப்-இன்ஸ்பெக்டர் என்பதும், அவர் சிதம்பரம் மந்தகரை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் மனைவி சூர்ய பிரியா (27) என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் சப்-இன்ஸ்பெக்டர் உடையணிந்து போலீஸார், கிராம நிர்வாக அலுவலர், பஸ்சில் ஓசி பயணம் எனப் பலரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

போலி சப் இன்ஸ்பெக்டர்
போலி சப் இன்ஸ்பெக்டர்
எஸ்.தேவராஜன்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சூர்யபிரியாவுக்கு உடந்தையாக இருந்த அவரின் கணவர் ராஜதுரை, சக்கரபாணி ஆகியோரைக் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சூர்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உடையில் கடலூர் மாவட்டத்தில் யார் யாரை ஏமாற்றினார், என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.