Published:Updated:

சிலிண்டரை வெடிக்கவைத்த டீக்கடைக்காரர்? -மனைவி பிரிந்து சென்றதால் 2 குழந்தைகளோடு பலியான சோகம்

தன் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு இரு நாட்களுக்கு முன் மீண்டும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் கருப்பையா. இந்த நிலையில் கீதா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

கருப்பையா
கருப்பையா

சிலிண்டர் வெடித்து இரண்டு பெண் குழந்தைகளுடன் டீக்கடைக்காரர் கருப்பையா பலியான சம்பவம் உசிலம்பட்டிப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதீபா
பிரதீபா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் டீக்கடை நடத்தி வந்த கருப்பையா-கீதா தம்பதிக்கு 7 வயதில் பிரதிபா, 5 வயதில் ஹேமலதா என இரண்டு மகள்கள். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன் போலீஸார் விசாரணை நடத்தி, சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், மீண்டும் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு இரு நாள்களுக்கு முன் மீண்டும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் கருப்பையா. இந்த நிலையில், கீதா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

ஹேமலதா
ஹேமலதா

மனைவி விட்டுச் சென்ற மனவேதனையுடன் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருப்பையா வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று சிலிண்டர் வெடித்து மூவரும் மரணமடைந்துள்ளனர். காயங்களுடன் குழந்தை ஹேமலதாவை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தும் பிழைக்க வைக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan

இவர்கள் மூவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பொதுமக்கள் கூறிவரும் நிலையில், காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது. தற்கொலை செய்யும் எண்ணத்தில் கருப்பையாவே சிலிண்டர் கேஸைத் திறந்து வெடிக்க வைத்தாரா.. அல்லது வேறு யாராவது இந்த நாச வேலையை செய்தார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சிலிண்டர் வெடித்து பலி
சிலிண்டர் வெடித்து பலி

கடந்த வாரம் இதே உசிலம்பட்டி பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் நடந்தது. தற்போது சிலிண்டர் வெடித்து மூவர் பலியான சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.