Published:Updated:

வேலூர்: பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொமை... ஆட்டோ கேங் மீது குண்டாஸ்!

வேலூர் மத்திய சிறை

வேலூரில், பெண் மருத்துவரைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ கேங்கைச் சேர்ந்த நான்கு பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வேலூர்: பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொமை... ஆட்டோ கேங் மீது குண்டாஸ்!

வேலூரில், பெண் மருத்துவரைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ கேங்கைச் சேர்ந்த நான்கு பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Published:Updated:
வேலூர் மத்திய சிறை

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலூரிலுள்ள சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்தார். அந்தப் பெண் மருத்துவர், அதே மருத்துவமனையில் பணிபுரியும் நாக்பூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் மார்ச் 16-ம் தேதி காட்பாடியில் இருக்கும் ‘கேலக்ஸி’ திரையரங்கில் படம் பார்க்கச் சென்றார். அன்று நள்ளிரவு 1:00 மணிக்குப் படம் முடிந்ததும் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைப் பகுதிக்குச் செல்வதற்காக திரையரங்கம் முன்பு ஆட்டோவுக்காகக் காத்து நின்றனர். அப்போது வந்த ஒரு ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்த்து ஐந்து பேர் இருந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

‘ஷேர் ஆட்டோ’ என்பதால் அந்தப் பெண்ணுக்கும் அவரின் ஆண் நண்பருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. வேலூர் புதிய பேருந்து நிலையத்தைக் கடந்ததும், ஆட்டோவிலிருந்த நபர்கள் திடீரென கத்திமுனையில் இருவரையும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பாலாற்றுப் பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து, அந்தப் பெண்ணை கூட்டாகச் சேர்ந்து, ஐந்து பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து இரண்டு பவுன் நகை, செல்போன்களைப் பறித்த ஆட்டோ கேங்... ஏ.டி.எம் கார்டையும் பறித்து, அதிலிருந்து ரூ.40,000 பணத்தையும் அபகரித்துக்கொண்டு தப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாதிக்கப்பட்ட பெண் தனது சொந்த மாநிலத்துக்குச் சென்றுவிட்டார். இதனால், இந்த விவகாரம் ஓரிரு நாள்கள் வெளியில் வரவில்லை. பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆட்டோ கேங் அடிதடிப் புகாரில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சிக்கியபோதுதான் பெண் மருத்துவரை அவர்கள் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் பேசி மின்னஞ்சல் மூலம் புகாரைப் பெற்றார் வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணன். இது தொடர்பாக, சத்துவாச்சாரிப் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பாரா என்கிற பரத், மணிகண்டன், மண்டை என்கிற சந்தோஷ்குமார், 18 வயதுக்குஉட்பட்ட சிறுவன் என ஆட்டோ கேங்கைச் சேர்ந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

ஐந்து பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 11 பிரிவுகளின்கீழ் வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தப் பாலியல் வன்கொடுமை விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. மார்ச் 23-ம் தேதி நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேலூரில் நடைபெற்ற அந்தக் கொடூரச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின், வேலூர் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பதிலளித்தார்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட ஆட்டோ கேங்கில், பார்த்திபன், பாரா என்கிற பரத், மணிகண்டன், மண்டை என்கிற சந்தோஷ்குமார் ஆகிய நான்கு பேர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பிறப்பித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism