Published:Updated:

கோவை: பட்டாசு வெடித்து வரவேற்பு!- அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

பா.ஜ.க-வில் இணைந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை உள்ளிட்டோர்மீது கோவை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் காலத்திலும், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்தான பேச்சுகளும், நடவடிக்கைகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை சில நாள்களுக்கு முன்னர் டெல்லியில்வைத்து பா.ஜ.க-வில் இணைந்தார். அவர் நேற்று கோவைக்கு வருகை தந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை
கோவை: `குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்...!’ - பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை பேட்டி

அதை முன்னிட்டு, சித்தாபுதூர் வி.கே.மேனன் சாலையிலுள்ள பா.ஜ.க அலுவலகம் முன்பு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, மேள தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து, மாலை, கிரீடம் அணிவித்து அண்ணாமலைக்கு பிராமண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், பா.ஜ.க அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அவர்களில் பலர் மாஸ்க் அணியாமல், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களை மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளிவிட்டு நிற்குமாறு அறிவுறுத்தினர்.

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

தொடர்ந்து தொண்டர்கள் முன்னிலையில் பேசிய அண்ணாமலை, ``2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்புமுனை ஏற்படும். பா.ஜ.க-வில் தற்போது புது ரத்தம் ஓடுகிறது. தேர்தலில் கடுமையாக உழைப்போம். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியமைப்பது உறுதி” என்றார்.

கோவை: `குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்...!’ - பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை பேட்டி

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதற்காக, பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி மற்றும் அண்ணாமலை ஆகியோர்மீது காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

சட்ட விரோதமாகக் கூடுதல், ஊரடங்கு உத்தரவை மீறுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல், பட்டாசு வெடித்தல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளில் கீழ் காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு