Published:Updated:

ராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது!'

ஜெலட்டின், டெட்டனேட்டர்
ஜெலட்டின், டெட்டனேட்டர்

வெடி வீசி மீன்பிடிக்கும் முறை, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளால் கடந்த காலங்களில் ஓரளவு குறைந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வழக்கமான முறையில் அல்லாமல் வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் தேவிபட்டினம் அருகே கைதுசெய்யப்படுள்ளனர். அவர்களிடமிருந்து ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.

கடலோர காவல்துறை
கடலோர காவல்துறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பர்யமான முறையில் நடந்துகொண்டிருந்த மீன் பிடிப்பு முறையைக் கைவிட்டுவிட்டு, அதிக லாபத்துக்காக கடல் வளத்தை அழிக்கும் தடைசெய்யப்பட்ட வலைகளை விசைப்படகு, இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகு மீனவர்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவருகிறார்கள்.

இது ஒருபக்கமென்றால், கடலில் வெடிகளை வீசி மீன் பிடிக்கும் மோசமான பழக்கம் மாவட்டத்தின் சில கடலோரப் பகுதிகளில் இருக்கிறது. கடல் வளத்தை மாசுபடுத்தும், மீன் இனங்களை அழிக்கும், மீன் உண்ணும் மக்களுக்கு நோய்களை உண்டாக்கியதோடு மட்டுமல்லாமல் வெடி வீசும்போது ஏற்பட்ட கவனக்குறைவால் மீனவர்களே பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளன.

ஆறுமுகம்
ஆறுமுகம்

அதன் காரணமாக வெடி வீசி மீன்பிடிக்கும் முறை, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளால் கடந்த காலங்களில் ஓரளவு குறைந்தது. ஆனாலும், வெடி வீசி மீன் பிடிக்கிறார்களா, வெடி மருந்து பதுக்கி வைத்திருக்கிறார்களா என்பதை கடலோர காவல்துறையினரும் கண்காணித்தபடி இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், திருப்பாலைக்குடி கடல் பகுதியில் வெடிவைத்து மீன் பிடிப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு காவல்துறையினர் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியான படகு ஒன்று வேகமாகச் சென்றது. அதை மோர்பண்ணை கடற்கரையில் நிறுத்திவிட்டு அதிலுள்ளவர்கள் ஓட முயன்றிருக்கிறார்கள்.

கென்னடி
கென்னடி

தப்பி ஓடிய மோர்பண்ணையைச் சேர்ந்த மீனவர்கள் கென்னடி, கோவிந்தராஜ், ஆறுமுகம் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர் காவல்துறையினர். அவர்களின் படகைச் சோதனை செய்ததில் மூன்று ஜெலட்டின் , 1-ஜிபிஎஸ் கருவி இருந்தன. அவற்றைக் கைப்பற்றினார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில் கடற்கரை மணலில் பதுக்கிவைத்திருந்த 19 ஜெலட்டின், ஐந்து டெட்டனேட்டர்களைக் கைப்பற்றினர்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு