Published:Updated:

சீட்டாட்டத்தில் தோல்வி - ரூ.38 கோடி மோசடி செய்த கோல்டுமேன் சாக்ஸ் துணைத் தலைவர் கைது!

செ.கார்த்திகேயன்

அஷ்வனி ஜூன்ஜுன்வாலா மூன்று பணியாளர்களின் கணினிகள் மூலம் 2 தவணைகளாக சுமார் 38 கோடி ரூபாயைச் சீனாவில் உள்ள Industrial and Commercial Bank of China வங்கிக்கு மாற்றியிருக்கிறார்.

GoldMan Sachs
GoldMan Sachs

உலகளாவிய முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் பெங்களூரு நிறுவனத்தில் 38 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் அஷ்வனி ஜுன்ஜூன்வாலா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் மதிக்கத்தக்க துணைத் தலைவர் பதவியில் இருந்த ஒருவர் பணமோசடி வழக்கில் சிக்கி கைதாகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மூன்றே மாதங்கள்.. 18 வங்கிகள்... 32 ஆயிரம் கோடி மோசடி! அதிர வைத்த ஆர்.டி.ஐ. உண்மை

அவர் இணையதள சூதாட்டத்தில் 70,000 அமெரிக்க டாலர்களை இழந்ததும் அதைச் சரிக்கட்ட அந்த நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய வேதாந்த் என்பவரின் யோசனையின் பேரில் நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அஷ்வனி ஜூன் ஜூன்வால, நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர்களைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். நிறுவன ஊழியர்களான கவுரவ் மிஸ்ரா, அபிஷேக் யாதவ், சுஜித் அப்பையா ஆகியோருக்குக் கணினி பயிற்சி அளிப்பதாகக் கூறி அவர்களது கணினி லாக்-இன்னை பயன்படுத்தி ஜூன்ஜூன்வாலா நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

சீட்டாட்டத்தில் தோல்வி - ரூ.38 கோடி மோசடி செய்த கோல்டுமேன் சாக்ஸ் துணைத் தலைவர் கைது!

தண்ணீர் கொண்டுவருதல் உள்ளிட்ட சிறுசிறு பணிகளுக்கு அவ்வப்போது அவர்களை அனுப்பிவிட்டு அவர்களது கணினிகள் மூலம் 2 தவணைகளாக சுமார் 38 கோடி ரூபாயைச் சீனாவில் உள்ள Industrial and Commercial Bank of China வங்கிக்கு மாறுதல் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் நிறுவனத்தின் கணக்குத் தணிக்கை ஒன்றில் தெரியவந்ததையடுத்து அஷ்வனி ஜுன்ஜுன்வாலா அரங்கேற்றிய பண மோசடி அம்பலமாகியிருக்கிறது. ஆனால் கவுரவ் மிஸ்ரா, அபிஷேக் யாதவ், சுஜித் அப்பையா ஆகியோர் தாங்கள் அறியாமையால் ஏமாந்துவிட்டதாகத் தெரிவித்த நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மோசடி நிதி நிறுவனங்கள்... இனி ஏமாற்ற முடியாது!

அஷ்வனி ஜூன் ஜூன்வாலா மோசடி செய்வதற்கான யோசனையை அளித்த வேதாந்த் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை காவல்துறை தேடி வருகின்றனர்.